Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பிரதமர் மோடியுடன் திடீர் சந்திப்பு.. கமல்ஹாசன் வைத்த முக்கிய கோரிக்கை.. என்ன மேட்டர்?

Kamal Haasan Meets PM Modi : டெல்லியில் பிரதமர் மோடியை, மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசன் எம்.பி சந்தித்துள்ளார். மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்று இருக்கும் நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பின்போது முக்கிய கோரிக்கை முன்வைத்ததாக அவர் தெரிவித்து உள்ளார்.

பிரதமர் மோடியுடன் திடீர் சந்திப்பு.. கமல்ஹாசன் வைத்த முக்கிய கோரிக்கை.. என்ன மேட்டர்?
கமல்ஹாசன் எம்பி - பிரதமர் மோடிImage Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 07 Aug 2025 17:45 PM

சென்னை, ஆகஸ்ட் 07 : டெல்லியில் பிரதமர் மோடியை (PM Modi) மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசன் (Kamal Haasan Mp) சந்தித்துள்ளார்.  மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள நிலையில், முதல்முறையாக பிரதமர் மோடி கமல்ஹாசன் சந்திதுள்ளார். இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடியிடம் முக்கிய விஷயங்கள் குறித்து அவர் கோரிக்கை வைத்துள்ளார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பிரனாக பொறுப்பேற்றார். திமுக ஆதரவில் அவர் மாநிலங்களவை எம்.பியாக தேர்வானார். 2024 மக்களவை தேர்தலின்போதே, திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை சீட் ஒதுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.

அதன்படியே, அவர் 2025 ஜூலை 25ஆம் தேதி மாநிலங்களவை எம்.பியாக அவர் பதவியேற்றார். தமிழில் உறுதிமொழி ஏற்று எம்பியாக கமல்ஹாசன் பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக, தமிழக மக்களின் குரலாக பிரதிபலிப்பாக இருப்பதாகவும் அவர் பேட்டியில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில்,  டெல்லியில்  பிரதமர் மோடியை, கமல்ஹாசன் எம்பி நேரில் சந்தித்துள்ளார்.  மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற பிறகு, முதல்முறையாக பிரதமர் மோடியை, கமல்ஹாசன் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, முக்கிய விஷயங்கள் குறித்து கோரிக்கை வைத்துள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கிழடி குறித்தும் பேசியதாகவும்  அவர் தெரிவித்தார்.

Also Read : ’கடமையை செய்ய போகிறேன்’ எம்.பியாக பதவியேற்கும் கமல்ஹாசன்.. இவருக்கு இவ்வளவு சலுகைகளா?

பிரதமர் மோடியை சந்தித்த கமல்ஹாசன்

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், ”மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று சந்தித்தேன். ஒரு கலைஞனாகவும் தமிழ்நாட்டின் பிரதிநிதியாகவும் அவரிடம் சில கோரிக்கைகளைத் தெரிவித்திருக்கிறேன்.

Also Read : ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரன் மறைவு.. பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் இரங்கல்!

அவற்றுள் தலையாயது கீழடி. தமிழின் தொன்மையை, தமிழ் நாகரிகத்தின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும் தமிழர்களின் முன்னெடுப்புகளுக்கு பிரதமர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன்” என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், இந்த சந்திப்பில் பிரதமர் மோடிக்கு கீழடி அகழாய்வு தொடர்பான சிலையையும்  கமல்ஹாசன் பரிசாக வழங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.