Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ராஜ்யசபா எம்.பியான கமல்ஹாசன்.. நாடாளுமன்றத்தில் தமிழில் பதவியேற்பு!

Rajya Sabha MP Kamal Haasan : ராஜ்யசபா எம்.பியாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதவியேற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் எம்.பியாக கமல்ஹாசன் தமிழில் பதவியேற்றார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2024ஆம் ஆண்டு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது கமல்ஹாசன் எம்.பியாக பதவியேற்றுள்ளார்.

ராஜ்யசபா எம்.பியான கமல்ஹாசன்.. நாடாளுமன்றத்தில் தமிழில் பதவியேற்பு!
கமல்ஹாசன் எம்பி
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 25 Jul 2025 12:13 PM

டெல்லி, ஜூலை 25 : ராஜ்யசபா எம்.பியாக மக்கள் நீதி மய்யம் தலைவர் (Makkal Needhi Maiam) கமல்ஹாசன் (Kamal Haasan MP) பதவியேற்றுள்ளார். நாடாளுமன்றத்தில் எம்.பியாக கமல்ஹாசன் தமிழில் பதவியேற்று கோப்புகளில் கையெழுத்திட்டார். பதவியேற்கும்போது கமல்ஹாசன் உறுதி மொழி ஏற்றார். அவர் கூறுகையில், ”மாநிலங்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் எனும் நான். சட்டத்தினால் நிறுவப்பட்டதான, இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்று ஆர்வமும், பற்றும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் இறையாண்மையும், ஒருமைப்பாட்டையும், உறுதியாக பற்றி நிற்பேன் என்றும், நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் விழுமிய முறைமையுடன் உறுதி கூறுகிறேன்” என உறுதிமொழி ஏற்றார்.

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு 2024ஆம் ஆண்டு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போது கமல்ஹாசன் எம்.பியாக பதவியேற்றுள்ளார்.  மாநிலங்களவை எம்பியாக கமல்ஹாசன் பதவியேற்று இருப்பது அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. 2018ஆம் ஆண்டு கட்சியை தொடங்கிய பிறகு, கமல்ஹாசன் தற்போது இந்த பொறுப்புக்கு வந்துள்ளார். மேலும், அவர் எந்த ஒரு சட்டமன்ற தேர்தலிலும் அவர் வெற்றி பெறவில்லை.

Also Read : பேச்சை குறைத்துவிட்டு வேலையை செய்ய வேண்டும் – தொண்டர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை..

எம்.பியாக பதவியேற்ற கமல்ஹாசன்

இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு முதல்வர் ஸ்டாலின் முதல்முறையாக மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஒரு ராஜ்சயபா சீட் ஒதுக்கினார். அதன்படியே, தற்போது மாநிலங்களவை எம்பியானார் கமல்ஹாசன். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன், “எனது கடமையை செய்ய டெல்லி செல்கிறேன். எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் மரியாதை கடமையாக இதை கருதுகிறேன்.

Also Read : மாநிலங்களவை உறுப்பினர்… கமல் ஹாசனை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்த நடிகர் சங்கத்தினர்!

எனது கன்னிப் பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும் என்பதை இப்போது சொல்லக் கூடாது” என தெரிவித்திருந்தார். கமல்ஹாசனை தொடர்ந்து, மாநிலங்களவை எம்.பியாக திமுக எம்.பிக்கள் சிவலிங்கம், சல்மா, வில்சன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். மேலும், அதிமுகவின் இன்பதுரை மற்றும் தனபால் ஆகிய இருவரும் 2025 ஜூலை 28ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.