Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அமெரிக்காவிடம் இருந்து ஆயுத கொள்முதலை நிறுத்தும் இந்தியா? – உண்மை என்ன?

India Denies US Arms Freeze : அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பிறகு இந்தியா, அந்நாட்டிடம் இருந்து ஆயுதங்கள் கொள்முதலை நிறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகமான ரூட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்தியா பாதுகாப்புத்துறை இதனை மறுத்துள்ளது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்காவிடம் இருந்து ஆயுத கொள்முதலை நிறுத்தும் இந்தியா? – உண்மை என்ன?
பிரதமர் நரேந்திர மோடி - டொனால்ட் டிரம்ப்
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Aug 2025 20:53 PM

அமெரிக்காவிடம் (America) இருந்து ஆயுதங்கள் வாங்கும் பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்தியதாக செய்தி முற்றிலும் கற்பனை என மத்திய பாதுகாப்புத்துறை விளக்கமளித்துள்ளது. இது தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனமான ரூட்டர்ஸ் (Reuters) வெளியிட்ட செய்தியில், அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்கும் பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. அமெரிக்க அரசு சுங்க வரியை (Tax) அதிகரித்திருந்த நிலையில் இந்தியா இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது. இந்த செய்தியை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

ரூட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட செய்தியில்,  ஜெனரல் டைனமிக்ஸ் லேண்ட் சிஸ்டம்ஸ் தயாரிக்கும் Stryker Combat Vehicle மற்றும் லாக்ஹீட் மார்ட்டீன் ஆகிய நிறுவனங்கள் உருவாக்கிய ஏவுகணைகள் வாங்கும் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அமெரிக்கா செல்லும் பயணம் ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதையும் படிக்க : இந்தியா மீது 50% வரி விதித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.. முழு விவரம்!

பாதுகாப்புத்துறையின் விளக்கம்

இந்த செய்தி குறித்து பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஏஎன்ஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஆயுதங்கள் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தையை இந்தியா நிறுத்தவில்லை. பல்வேறு கொள்முதல் நடவடிக்கைகள் மற்றும் நடைமுறையில் விதிகளின் படி முன்னேற்றம் நடைந்து வருகின்றன என தெரிவித்துள்ளனர்.

டிரம்ப் சுங்கவரி விவகாரம்

 ரஷ்யாவிலிருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,  இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட சுங்கவரியை 50 சதவிகிதமாக உயர்த்தினார். இது உலகிலேயே மிக உயர்ந்த அளவாக கருதப்படுகிறது.  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்த சுங்கவரி நடவடிக்கையை ‘நியாயமற்றது’ எனக் கண்டித்துள்ளது. இருப்பினும், இதுவரை எந்தத் தீர்வும் காணப்படவில்லை.

இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்து டிரம்ப் அறிவிப்பு

 

இதையும் படிக்க : உக்ரைன் விவகாரம் – பிரதமர் மோடியிடம் விளக்கமளித்த ரஷ்ய அதிபர் புதின்

இந்தியாவின் பதில்

இதற்கு இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளதாவது, அமெரிக்கா இந்தியாவை நியாயமற்ற முறையில் குறிவைத்துள்ளதாக குற்றம்சாட்டியது. அதே நேரம் அவர்களே ரஷ்யாவிடம் இருந்து அத்தியாவசிய பொருட்களை இறங்குமதி செய்கின்றனர்.  மேலும் இந்தியா தனது தேசிய நலன்ககளை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 8, 2025 அன்று ரஷ்ய அதிபர் புதினை தொடர்பு கொண்டு உக்ரைன் விவகாரம் குறித்து கேட்டறிந்ததாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி விளக்கமளித்துள்ளார். இது உலக அரசியல் அரங்கில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.