அமலுக்கு வரும் இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரி.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!
Donald Trump Tariffs on India : இந்தியா பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார். உலகிலேயே அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்கா, ஜூலை 30 : இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் (Donald Trump) அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்தியா அமெரிக்கா (America Tariffs On India) இடையேயான வர்த்தக ஒப்பந்தம் (India US Deal) இழுபறியில் இருக்கும் நிலையில், கூடுதல் வரி விதிப்பு 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க பொருட்களுக்கு உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார். அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, உலக நாடுகள் மீது வரிகளை விதித்து வருகிறார். 2025 ஏப்ரல் மாதம் உலக நாடுகள் மீது டிரம்ப் ஒவ்வொரு வரியை விதித்தார். இதற்கிடையில், அனைத்து நாடுகளும் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கான கடைசி நாள் 2025 ஜூலை 31ஆம் தேதியாகும்.
இதுவரை பிரிட்டன், இந்தோனியோ உள்ளிட்ட நாடுகள் மட்டுமே வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்திய உள்ளிட்ட பல நாடுகள் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகயில் ஈடுபட்டு வருகிறது. வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சில வாரங்களாக ஈடுபட்டு வருகிறது. ஆனால், சில விஷயங்களில் உடன்பாடு எட்டப்படாததால் பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. இதற்கிடையில், 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.




Also Read : ‘அமெரிக்காவை எதிர்த்தால் 10 சதவீதம் கூடுதல் வரி’ பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை
இந்தியாவுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி
Donald J. Trump Truth Social 07.30.25 08:09 AM EST pic.twitter.com/klfYpLsR0F
— Fan Donald J. Trump Posts From Truth Social (@TrumpDailyPosts) July 30, 2025
இது தொடர்பான தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “இந்தியா எங்கள் நண்பராக இருந்தாலும், பல ஆண்டுகளாக, அவர்களின் கட்டணங்கள் மிக அதிகமாக உள்ளன. உலகிலேயே மிக அதிகமாக வரி விதிக்கும் நாடு இந்தியா. மேலும் அவர்கள் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு கடுமையான வர்த்தக தடைகளைக் கொண்டிருக்கின்றன.
நாங்கள் அவர்களுடன் ஒப்பீட்டளவில் சிறிய வியாபாரத்தையே செய்துள்ளோம். அவர்கள் எப்போதும் தங்கள் இராணுவ உபகரணங்களில் பெரும்பகுதியை ரஷ்யாவிலிருந்தே வாங்கியுள்ளனர். இந்தியா சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய்யை வாங்குகிறது.
Also Read : பரஸ்பர வரி விதிப்பு நிறுத்தத்தை நீட்டிக்கும் திட்டமில்லை.. டொனால்ட் டிரம்ப் அதிரடி!
உக்ரைனுடன் மோதலை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று உலகம் விரும்புகிறது. இந்த நேரத்தில் இதுபோன்று செய்வது எல்லாம் நல்லதல்ல. எனவே, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் இந்தியா மேற்கூறிய காரணங்களால் 25 சதவீத வரி செலுத்த வேண்டும். இதோடு அபராதமும் விதிப்போம்” என குறிப்பிட்டுள்ளார். இந்தியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகள் பல மாதங்களாக வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதித்து வருகின்றனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.