Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

‘அமெரிக்காவை எதிர்த்தால் 10 சதவீதம் கூடுதல் வரி’ பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை

US President Donald Trump On Tariffs : அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகள் மீது 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் டிரம்ப் தெரிவித்துள்ளார். பரஸ்பர வரி விதிப்பை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்த கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில், பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

‘அமெரிக்காவை எதிர்த்தால் 10 சதவீதம் கூடுதல் வரி’ பிரிக்ஸ்  நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை
டொனால்டு டிரம்ப்Image Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 07 Jul 2025 12:59 PM

அமெரிக்கா, ஜூலை 07 : அமெரிக்க எதிர்ப்பு கொள்கைகளை ஆதரிக்கும் நாடுகள் மீது 10 சதவீதம் கூடுதல் வரி (US Tariffs) விதிக்கப்படும் என பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் அதிபர் டிரம்ப் (Donald Trump) தெரிவித்துள்ளார். மேலும், பரஸ்பர வரி விகிதங்கள் தொடர்பாக 12 நாடுகளுக்கு கடிதம் அனுப்பப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றத்தில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக, பரஸ்பர வரி விதிப்பில் முக்கியமாக கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே, இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளுக்கு பரஸ்பர வரி விதித்திருக்கிறார். இந்தியா உட்பட பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான பரஸ்பர வரியை டிரம்ப் 90 நாட்களுக்கு இடை நிறுத்தியுள்ளார். இந்த அவகாசம் 2025 ஜூலை 9ஆம் தேதி முடிவடைய உள்ளது. இதனால், பரஸ்பர வரி விகிதங்கள் விரைவில் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளையும் அமெரிக்கா செய்து வருகிறது.

‘அமெரிக்காவை எதிர்த்தால் 10% கூடுதல் வரி’

இப்படியான சூழலில், அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பல்வேறு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது, பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈரான், ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட 11 நாடுகள் அடங்கிய பிரிகஸ் அமைப்பின் மாநாடு 2025 ஜூலை 6ஆம் தேதியான நேற்று நடைபெற்றது.

இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட டிரம்ப் வரி விதிப்பு குறித்து பேசி இருக்கிறார். அதாவது, “அமெரிக்காவிற்கு எதிரான கொள்கைகளை பின்பற்றும் நாடுகள் மீது கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும்.

இந்தக் கொள்கைக்கு எந்த விதிவிலக்கும் இருக்காது. இந்த விஷயத்தில் உங்கள் கவனத்திற்கு நன்றி. உலகம் முழுவதிலுமிருந்து பல்வேறு நாடுகளுக்கான வரி விதிப்பு கடிதங்கள் மற்றும்/ ஒப்பந்தங்கள் 2025 ஜூலை 7 ஆம் தேதி திங்கள் கிழமை மதியம் 12:00 மணி முதல் வழங்கப்படும்” என கூறினார்.

டிரம்ப் அறிவிப்பு

 

இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்

பரஸ்பர வரி விதிப்பை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அதிபர் டிரம்ப் அறிவித்த கால அவகாசம் இன்னும் ஓரிரு நாட்களில் முடிவடைகிறது. அதற்குள் இந்தியா பாகிஸ்தான் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் அதற்காக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.