Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Elon Musk : அமெரிக்காவில் புதியதாக கட்சி தொடங்கிய எலான் மஸ்க்!

Elon Launched New Party | உலக பணக்காரர் எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிய கட்சி ஒன்றை அறிமுகம் செய்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும் ஒரு கட்சி முறைக்கு சவால் விடும் விதமாக அவர் இந்த முயற்சியை கையில் எடுத்துள்ளதாக கூறியுள்ளார். இந்த நிலையில், எலான் மஸ்கின் புதிய கட்சி குறித்து விரிவாக பார்க்கலாம்.

Elon Musk : அமெரிக்காவில் புதியதாக கட்சி தொடங்கிய எலான் மஸ்க்!
எலான் மஸ்க்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 06 Jul 2025 07:58 AM

அமெரிக்கா, ஜூலை 06 : உலக பணக்காரர்களில் ஒருவரும், அமெரிக்க அரசின் முக்கிய அலுவல் அதிகாரிகளில் ஒருவராகவும் இருந்த எலான் மஸ்க் (Elon Musk), அமெரிக்காவில் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் இருக்கும் “ஒரு கட்சி” முறையை எதிர்த்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறியுள்ளார். கடந்த சில நாட்களாகவே எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையே கடும் மோதல் நீடித்து வந்த நிலையில், தற்போதை அதனை மேலும் விரிசல் ஏற்படுத்தும் விதமான மஸ்கின் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது.

அமெரிக்காவில் புதிய கட்சி தொடங்கிய எலான் மக்ஸ்

டெஸ்ட்ல நிறுவனத்தின் தலைவரும் உலக பணக்காரருமான எலான் மஸ்க் 2024 நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக களம் இறங்கினார். அந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என, நிதி உதவி முதல் வீதிகளில் இறங்கி பிரசாரம் செய்வது வரை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில், இருவருக்கும் இடையே மிக நெருக்கமான உறவு ஏற்பட்டது. இதன் காரணமாக அரசாங்கத்தின் முக்கிய பொருப்புகளை டிரம்ப், மஸ்கிடம் ஒப்படைத்தார்.

டிரம்ப் – மஸ்க் உறவில் விரிசல் ஏற்படுத்திய ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒன் பிக் பியூட்டிஃபுல் பில் (One Big Beautiful Bill) என்ற மசோதாவை அறிமுகம் செய்தார். இதில் இருந்தது தான் இருவருக்கும் இடையே மோதல் எழ தொடங்கியது. அதாவது தான் இயற்றிய மசோதாவை டிரம்ப் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதிய நிலையில், எலான் மக்ஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதன் காரணமாக இருவரும் மாறி மாறி கருத்துக்களை பகிர்ந்து வந்தனர். இதன் காரணமாக இருவரது உறவிலும் கடும் விரிசல் ஏற்பட்ட நிலையில், தற்போது எலான் மக்ஸ் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

அமெரிக்கா கட்சியை தொடங்கிய எலான் மக்ஸ்

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க், நமது நாட்டை வீன் செலவு மற்றும் ஊழல் மூலம் திவாலாக்கும் விவகாரத்தில் நாம் ஜனநாயக ஆட்சியில் இல்லை. ஒரு கட்சி முறையில் வாழ்கிறோம். உங்கள் சுதந்திரத்தை உங்களுக்கு கொடுப்பதற்காக இன்று அமெரிக்க கட்சி உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.