Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vivo Y400 5G : இந்தியாவில் அறிமுகமானது விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன்.. சிறப்பு அம்சங்கள் என்ன?

Vivo Y400 5G Smartphone Introduced in India | விவோ நிறுவனம் தனது ஒய் சீரீஸ் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vivo Y400 5G : இந்தியாவில் அறிமுகமானது விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன்.. சிறப்பு அம்சங்கள் என்ன?
விவோ ஒய்400 5ஜி
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 Aug 2025 21:35 PM

இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றுதான் விவோ (Vivo). இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தும் நிலையில், இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போனை (Vivo Y400 5G Smartphone) அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் அறிமுகமானது விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனம் கடந்த சில நாட்களாக தனது ஒய் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை (Y Series Smartphones) இந்தியாவில் ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகம் செய்து வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அந்த நிறுவனம் தற்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஆன விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : Motorola G86 Power : வெறும் ரூ.17,999-க்கு அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது மோட்டோரோலா ஜி86 பவர்!

விவோ ஒய்400 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?

இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் Full HD + AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 4 ஜெனரேஷன் 2 சிப்செட் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

இதையும் படிங்க : Vivo T4R : அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமானது விவோ டி4ஆர்.. விலை எவ்வளவு?

விலை மற்றும் இதர சிறப்பு அம்சங்கள்

இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்கம் 50 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. முன் பக்கத்தில் 32 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 90 வாட்ஸ் சார்ஜிங் திறன் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம், 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,999-க்கு தொடங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 07, 2025 முதல் விலைக்கு விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.