இந்தியாவில் அறிமுகமானது ரியல்மி 15 ப்ரோ ஸ்மார்ட்போன்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
Realme 15 Pro Smartphone Introduced in India | ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், இந்த நிறுவனம் தற்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஆன ரியல்மி 15 ப்ரோ ஸ்மர்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

ரியல்மி (Realme) நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது ரியல்மி 15 ப்ரோ ஸ்மார்ட்போனை (Realme 15 Pro Smartphone) அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சிறந்த அம்சங்களுடன் கூடிய பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன் ஆக உள்ளது. இந்த நிலையில், ரியல்மி அறிமுகம் செய்துள்ள இந்த ரியல்மி 15 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ரியல்மி 15 ப்ரோ ஸ்மார்ட்போன் – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
ரியல்மி நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஆன ரியல்மி 15 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் Curved AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் சிப்செட் (Snapdragon 7 Gen Chipset) அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 50 மெகா பிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் கொண்ட கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்போனில் 7,000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.




இதையும் படிங்க : பட்ஜெட் விலையில் அறிமுகமான ரியல்மி சி71 ஸ்மார்ட்போன்.. இத்தனை சிறப்பு அம்சங்களா?
அட்டகாசமான அம்சங்களுடம் அறிமுகமான ரியல்மி 15 ப்ரோ ஸ்மார்ட்போன்
Realme 15 Pro launched in India🇮🇳
📱6.8-inch 1.5K 144Hz Quad-Curved AMOLED
💾Snapdragon 7 Gen 4 SoC
📸50MP Main OIS + 50MP UW Rear Cameras
🤳50MP Front Camera
🔋7000mAh Battery
⚡80W Wired Charging
⚙️Android 15, RealmeUI 6.0Price:
8GB+128GB: Rs 31,999
8GB+256GB: Rs 33,999… pic.twitter.com/2v9YIpqUgR— TrakinTech (@TrakinTech) July 24, 2025
விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்
- ரியல்மி 15 ப்ரோ ஸ்மார்ட்போன் பல வகைகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது 8GB RAM + 128GB ஸ்டோரேக் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.28,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- இதேபோல 8GB RAM + 256 GB ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி 15 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.30,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- மேலும், 12 GB RAM + 256 GB ஸ்டோரேக் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.32,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட இந்த ஸ்மார்ட்போன்களுக்கு குறிப்பிட்ட கார்டுகளுக்கு ரூ.3,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க : ரூ.25,000-க்குள் கிடைக்கும் சிறந்த கேமரா அம்சத்தை கொண்ட ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!
எப்போது முதல் விற்பனை
ரியல்மியின் இந்த ஸ்மார்ட்போன் வெல்வட், பச்சை, சில்க் பர்ப்பில் மற்றும் சில்வர் ஆகிய நிறங்களில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஜூலை 30, 2025 முதல் விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.