பட்ஜெட் விலையில் அறிமுகமான ரியல்மி சி71 ஸ்மார்ட்போன்.. இத்தனை சிறப்பு அம்சங்களா?
Realme C71 India Launch | ரியல்மி நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது பட்ஜெட் விலையில் புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்தியாவில் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றுதான் ரியல்மி (Realme). இந்த நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன் ஆன ரியல்மி சி71 ஸ்மார்ட்போனை (Realme C71 Smartphone) அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ரியல்மி சி71 ஸ்மார்ட்போன்
ரியல்மி சி71 ஸ்மார்ட்போன் பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. அவற்றை குறித்து விரிவாக பார்க்கலாம்.




ஸ்கீரின் அம்சங்கள்
இந்த ரியல்மி சி71 ஸ்மார்ட்போனில் 6.75 இன்ச் HD+ டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை கொண்டுள்ளது. இதில் Unisoc T615 சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது.
கேமரா அம்சங்கள்
இந்த ரியல்மி சி71 ஸ்மார்ட்போனில் 13 மெகா பிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
பேட்டரி மற்றும் மேலும் சில சிறப்பு அம்சங்கள்
ரியல்மி சி71 ஸ்மார்ட்போன் 4ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் கொண்டுள்ளது. இதேபோல இந்த ஸ்மார்ட்போன் 64ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 6300 mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சமும் இதில் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜி நெட்வொர்க்கில் இயங்கும்.
பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரியல்மி சி71 ஸ்மார்ட்போன்
realme C71 launched in India
✅6.67″ 90Hz Display
✅UNISOC T7250 SoC
✅8MP Rear Camera
✅5MP Front Camera
✅6300mAh Battery
✅15W Charging4GB+64GB: ₹7,699
6GB+128GB: ₹8,699 pic.twitter.com/Yu5EYtXjbe— Smartprix (@Smartprix) July 15, 2025
இதையும் படிங்க : ரூ.25,000-க்குள் கிடைக்கும் சிறந்த கேமரா அம்சத்தை கொண்ட ஸ்மார்ட்போன்கள்.. லிஸ்ட் இதோ!
ரியல்மி நிறுவனம் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் தொடர்ந்து பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தான் இந்த புதிய மாடல் ரியல்மி சி71 ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி சி71 ஸ்மார்ட்போனை ரூ.7,699-க்கும், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி சி71 ஸ்மார்ட்போனை வெறும் ரூ.8,699-க்கு அறிமுகம் செய்துள்ளது.
சிறந்த அம்சங்களுடன் கூடிய ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன்கள் சிறந்த தேர்வாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.