இந்தியாவின் அதிகம் பயன்படுத்தும் 8 முக்கிய அரசு செயலிகள் – இந்த லிஸ்ட்டில் உங்க ஆப் இருக்கா?
India’s Best Govt Apps : அரசின் சேவைகளை பெற மத்திய அரசு செயலிகளை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. ஆதாரை அப்டேட் செய்வது முதல், டிரைவிங் லைசன்ஸை பாதுகாப்பு வரை இந்த செயலிகள் நமக்கு பெரிதும் பயன்படுகின்றன. இந்த கட்டுரையில் அதிகம் பயன்படுத்தப்படும் 8 செயலிகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இன்று நாம் இருக்கும் டிஜிட்டல் உலகத்தில் ஸ்மார்ட்போன்களின் (Smartphone) செயல்பாடு இன்றியமையாததாக மாறிவிட்டது. நம் வேலைகளை எளிமையாக்கும் பல செயலிகள் பிளே ஸ்டோரில் (Google Play Store) கிடைக்கின்றன. ஆனால் அதன் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுகிறது. இந்த நிலையில் மத்திய அரசு பல நம்பகமான செயலிகளை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. அரசின் அதிகாரப்பூர்வ செயலிகள் இந்தியர்கள் ஒவ்வொரு வாழ்விலும் மிக அத்தியாவசிய அம்சமாக மாறிவிட்டது. வீட்டு மின் கட்டணம் செலுத்துவது முதல், வாகன சான்றிதழ் பார்க்கும் வரை அனைத்தையும் ஸ்மார்ட் போன் மூலம் சில நொடிகளில் செய்ய முடிகிறது. இந்திய அரசு அறிமுகப்படுத்திய பல்வேறு செயலிகளில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கியமான முன்னணி 8 அரசு ஆப்கள் பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
நிதி மற்றும் பணப்பரிவர்த்தனை செயலிகள்
BHIM (Bharat Interface for Money)
யுபிஐ (UPI) வழியாக நேரடி வங்கிப் பரிவர்த்தனை செய்ய முடியும். யுபிஐ பின் மூலம் பாதுகாப்பாக பணம் அனுப்பும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற செயலிகளை விட இது ஆதரவு பெற்றதால் பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மேலும் இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்களிலும் பயன்படுத்த முடியும்.
RBI Retail Direct
பொது மக்களுக்கு அரசு பத்திரங்களில் நேரடி முதலீடு செய்ய வாய்ப்பை வழங்குகிறது. இது இந்திய ரிசர்வ் வங்கியின் உருவாக்கிய ஆப் என்பாதல் பாதுகாப்பானது. ஓடிபி மற்றும் பாஸ்வேர்டு மூலம் பயன்படுத்தும் வாய்ப்பு. இணையதளம் மூலமாகவும் பயன்படுத்தலாம்.




இதையும் படிக்க : e Mail-ல் வரும் இந்த லிங்கை கிளிக் செய்யாதீங்க.. வருமான வரி தாக்கல் மோசடி குறித்து எச்சரிக்கும் PIB!
ஆரோக்கியம்
Aarogya Setu
கோவிட்-19 தொடர்புடைய நோய் பரவல் குறித்து கண்காணிக்க முடியும். மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த முடியும்.
CoWIN
கோவிட் தடுப்பூசி பதிவு, நேரம் முன்பதிவு, சான்றிதழ் பதிவிறக்கம் ஆகிய வசதிகளுக்காக உருவாக்கப்பட்ட செயலி. இது மத்திய சுகாதார அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. இது நேரடியாக ஆப் மூலம் பயன்படுத்த முடியும். அல்லது இணையதளம் வழியாக, உமாங் ஆப் மூலமாக பயன்படுத்த முடியும்.
இதையும் படிக்க : இணையத்திற்கு அடிமையாகாமல் இருக்க இந்த 5 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க!
போக்குவரத்து மற்றும் பயன்பாட்டு சேவைகள்
mParivahan
ஆர்சி புக் விவரங்கள் மற்றும் டிரைவிங் லைசென்ஸை ஆன்லைனில் பார்வையிட முடியும். சாலை போக்குவரத்து அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டதால் பாதுகாப்பானது. ஓடிபி அடையில் மட்டுமே லாகின் செய்ய முடியும்.
DigiLocker
ஆதார், பான், கல்விச் சான்றிதழ்கள் போன்ற முக்கிய ஆவணங்களை கிளவுட்டில் பாதுகாப்பாக சேமிக்க உதவும். இது மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டது. ஆதார் மூலமே இதனை லாகின் செய்ய முடியும்.
அரசு மற்றும் பொது சேவைகள்
UMANG (Unified Mobile App for New-Age Governance)
ஒரே இடத்தில் இபிஎஃப்ஓ போன்ற 1,200க்கும் மேற்பட்ட மத்திய, மாநில அரசுப் பணிகளை ஒரே இடத்தில் மேற்கொள்ளலாம். ஆதார், மொபைல் ஓடிபி ஆகியவற்றின் மூலமாகவே லாகின் செய்ய முடியும்.
MyGov
அரசின் கொள்கைகளில் பங்கு பெற, கருத்து கூற, போட்டிகளில் கலந்துகொள்க இந்த ஆப் பயன்படுகிறது. இது மத்திய அரசால் உருவாக்கப்பட்டது என்பதால் பாதுகாப்பானது.
mAadhaar
ஆதார் கார்டை மொபைலில் வைத்திருக்க, தகவல் புதுப்பிக்க போன்ற தேவைகளுக்கு பயன்படுகிறது. இதன் மூலம் நாம் செல்லும் இடங்களில் ஆதாரை தனியாக எடுத்து செல்ல வேண்டியதில்லை.