Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

போனை வயர்லெஸ் பவர் பேங்க் மூலம் சார்ஜ் செய்கிறீர்களா? அப்போ இத படிங்க!

Wireless Power Banks : உலக அளவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அதில் உள்ள மிகப்பெரிய பிரச்னை அதன் சார்ஜ் விரைவில் தீர்ந்துபோவதாகத் தான் இருக்கும். இதனை சரி செய்ய பலரும் பவர்பேங்க் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சமீப காலமாக வயர்லெஸ் பவர்பேங்க் பயன்படுத்துவது டிரெண்டாகி வருகிறது. அதில் உள்ள பிரச்னைகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

போனை வயர்லெஸ் பவர் பேங்க் மூலம் சார்ஜ் செய்கிறீர்களா? அப்போ இத படிங்க!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Jul 2025 19:28 PM

இப்பொதெல்லாம் போன் இல்லாமல் மனிதர்களால்  ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது. மனித வாழ்க்கையின் ஒரு அங்கமாக ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்டது. உங்களிடம் ஸ்மார்ட்போன் இருந்தால், உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விடலாம். இருப்பினும் அதனை சரியாக பயன்படுத்துவது மிக முக்கியம். இந்த நிலையில் ஸ்மார்ட்போனில் உள்ள பிரச்னை அதன் சார்ஜ் விரைவில் தீர்ந்துபோவதாகத் தான் இருக்கும். குறிப்பாக வெளியில் இருந்தால், சார்ஜ் போட முடியாது. இதனால் பலரும் பவர்பேங்க் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ஸ்மார்ட்போன் பயனர்கள் வயர்லெஸ் பவர்பேங்க்கை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.

வயர்லெஸ் பவர் பேங்க்,  கேபிள் இல்லாமல் மொபைலை சார்ஜ் செய்யும் வசதியை வழங்குகின்றன. ஆனால் வயர்லெஸ் பவர் பேங்க் மூலம் போனை சார்ஜ் செய்வது சரியா? அல்லது அது போனுக்கு ஏதேனும் சேதத்தை ஏற்படுத்துமா? என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். இந்த கட்டுரையில் வயர்லெஸ் பவர் பேங்கின் பயன்கள் மற்றும் அதில் உள்ள பிரச்னைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிக்க : போனில் இந்த செட்டிங்ஸை மாற்றுங்கள் – யாராலும் திருட முடியாது!

வயர்லெஸ் பவர் பேங்க்கின் பயன்கள்

வயர்லெஸ் பவர் பாங்க் காயில் (Coil) தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இது ஒரு மின்காந்த புலம் மூலம் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்கிறது. இந்த பவர் பேங்க்கில் உங்கள் போனை வைத்தால், சார்ஜ் ஆகத் தொடங்கும். சமீப காலமாக மக்கள் இந்த வகை பவர் பேங்க்கை அதிகம் பயன்படுத்துவதற்கு காரணம், வெளியே செல்லும்போது, கேபிளை எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. கேபிளை மீண்டும் மீண்டும் இணைப்பதால் சார்ஜிங் போர்ட்டுக்கு சேதம் ஏற்படும் என்ற பயம் இல்லை. கூடுதலாக நவீன வசதிகளுடன் ஸ்டைலானதாகவும் பார்க்கப்படுகிறது. இதன் மூலம், பயணங்களின்போது உங்கள் தொலைபேசியை மிக எளிதாக சார்ஜ் செய்யலாம்.

இதையும் படிக்க: இரவு முழுக்க போனை சார்ஜில் வைத்திருக்கிறீர்களா? காத்திருக்கும் ஆபத்து!

வயர்லெஸ் பவர் பேங்க்கின் பிரச்சனைகள்

வயர்லெஸ் சார்ஜிங் செய்யும் போது அதிக வெப்பம் உருவாகிறது. தொடர்ந்து அதிக வெப்பநிலை போனின் பேட்டரியை சேதப்படுத்தும். இது அதன் செயல்திறனையும் பாதிக்கிறது. மேலும், வயர்லெஸ் பவர் பேங்கின் சார்ஜிங் வேகம், கேபிள் பவர் பேங்கை விட மிகவும் மெதுவாக உள்ளது. எனவே, தொலைபேசி சார்ஜ் ஆக அதிக நேரம் எடுக்கும். ஸ்மார்ட்போனை சரியாக வைக்கப்படாவிட்டால், சார்ஜ் ஆகாமல் போகவும் வாய்ப்பிருக்கிறது.  வயர்லெஸ் சார்ஜிங் மெதுவாக பேட்டரி ஆயுளைக் குறைக்கிறது. எனவே, நீங்கள் வயர்லெஸ் பவர் பேங்கை எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டும். தேவைக்கேற்ப பயன்படுத்தினால், பெரிய பிரச்னை இருக்காது. ஆனால் நீங்கள் தினமும் உங்கள் போனை இதன் மூலம் சார்ஜ் செய்தால், போனின் பேட்டரி மற்றும் செயல்திறன் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம்.