ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்.. ஆவணங்களை சமர்பிக்க உத்தரவு..
EC Notice To Rahul Gandhi: பெங்களூரு மத்திய மக்களவை தொகுதியில் சுமார் ஒரு லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்த நிலையில், கர்நாடகா தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்கும் படி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

2024 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் போலி வாக்காளர்கள் பலரும் வாக்களித்ததாக ராகுல் காந்தி சமீபத்தில் ஒரு பெரிய குற்றச்சாட்டை முன் வைத்தார். இந்த குற்றச்சாட்டு அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இதனை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை நிறுவிப்பதற்காக ராகுல் காந்தி பயன்படுத்திய ஆவணங்கள் தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பிக்கும் படி ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. போலி வாக்காளர்கள், போலி முகவரி, ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், தவறான புகைப்படங்கள், படிவம் 6 தவறாக பயன்படுத்தப்பட்டு இருப்பது போன்ற குற்றச்சாட்டுகளை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன் வைத்திருந்தார்.
ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள்:
இதில் குறிப்பாக பெங்களூருவில் இருக்கக்கூடிய மத்திய மக்களவைத் தொகுதியில் மட்டும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் திருடப்பட்டதாகவும் இந்த தொகுதியில் இருக்கக்கூடிய 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் முகவரி போலியானவை என்றும் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சில டேட்டாக்களை முன்வைத்து அவர் வெளியிட்டிருந்தார்.
மேலும் படிக்க: அமெரிக்காவுக்கு ஸ்மார்ட்போன் அதிகம் வழங்கும் நாடு இந்தியா – அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
இந்த நிலையில் இது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. மேலும் ராகுல் காந்தி முன் வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். அல்லது தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக குறிப்பிட்டு மன்னிப்பு கோர வேண்டும் என தேர்தல் ஆணையம் திறப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்:
இது போன்ற சூழலில் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கர்நாடகா தேர்தல் ஆணையம் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது கர்நாடகாவில் ஒரு பெண் வாக்காளர் இரண்டு முறை வாக்களித்ததாக கூறியிருந்த நிலையில் இது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: உலகில் நடக்கும் நேரடி பணப் பரிவர்த்தனைகளில் 50% யுபிஐ.. பிரதமர் மோடி பெருமிதம்!
மேலும் ராகுல் காந்தி பயன்படுத்திய ஆவணங்கள் தேர்தல் அதிகாரியால் கொடுக்கப்படவில்லை என்பதால் அவர்களிடம் இருக்கக்கூடிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடனம் சமர்ப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆவணங்கள் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.