அசாமில் நள்ளிரவில் மிதமான நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவு!
Assam Earthquake | அசாமில் இன்று (ஆகஸ்ட் 14, 2025) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் மிக குறைவாக இருந்த நிலையில், பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அசாம், ஆகஸ்ட் 14 : அசாம் (Assam) மாநிலம் தூப்ரி மாவட்டத்தி இன்று (ஆகஸ்ட் 14, 2025) அதிகாலை மிதமான அளவில் நிலநடுக்கம் (Earthquake) உணரப்பட்டுள்ளது. பொதுமக்கள் தூங்கிக்கொண்டு இருந்த நேரம் என்பதால், நிலநடுக்கம் காரணமாக பதற்றமடைந்த பொதுமக்கள் சிலர் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் சிறியதாக பதிவு செய்யப்பட்ட நிலையில், இதனால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
அசாமில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம்
அசாம் மாநிலத்தில் உள்ள தூப்ரி மாவட்டத்தி இன்று (ஆகஸ்ட் 14, 2025) அதிகாலை சரியாக 1.01 மணி அளைவில் மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.8 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் ஆழம் கொண்டு இருந்தது என்று தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் (National Center for Seismology) தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.




இதையும் படிங்க : Dausa Road Accident: ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து..10 பேர் உயிரிழப்பு!
2.8 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கம்
EQ of M: 2.8, On: 14/08/2025 01:01:18 IST, Lat: 26.28 N, Long: 89.87 E, Depth: 10 Km, Location: Dhubri, Assam.
For more information Download the BhooKamp App https://t.co/5gCOtjcVGs @DrJitendraSingh @OfficeOfDrJS @Ravi_MoES @Dr_Mishra1966 @ndmaindia pic.twitter.com/jdArXY2JFH— National Center for Seismology (@NCS_Earthquake) August 13, 2025
தொடர்ந்து அதிகரிக்கும் நிலநடுக்கங்கள்
சமீப காலமாக இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளில் தொடர்ந்து நிலநடுக்கம் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தாய்லாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது இந்தியாவின் முக்கிய பகுதியான அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : Air India Flight: ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு.. சென்னையில் அவசரமாக தரையிறக்கம்!
அசாமில் ரிக்டர் அளவில் மிக குறைந்த அளவிலான நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்ட நிலையில், பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இழப்புகள் குறித்தும் எந்த வித தகவலும் வெளியாகாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.