Uttarakhand Cloudburst : உத்தரகாண்டில் பல்வேறு பகுதிகளில் மேக வெடிப்பு.. கொத்து கொத்தாக அடித்துச் செல்லப்பட்ட மக்கள்!
Uttarakhand Flash Floods | இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவமழை காரணமாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் உத்தராகாண்டின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மிகுந்த சேதம் ஏற்பட்டுள்ளது.

உத்தர்காசி, ஆகஸ்ட் 06 : உத்தரகாண்ட் (Uttarakhand) மாநிலம் உத்தர்காசியில் திடீர் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கில் 10 ராணுவ வீரர்கள் மாயமானதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. உத்தர்காசியில் பல்வேறு பகுதிகளில் மேக வெடிப்பு ஏற்பட்ட நிலையில், வெள்ளப்பெருக்கு காரணமாக ஏராளமான வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக அங்கு வாழும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், திடீர் வெள்ளத்தில் மாயமான ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உத்தகாண்டின் பல்வேறு பகுதிகளில் மேக வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது தாராலி கிராமம். இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 648 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த பகுதியில் கன மழை பெய்ததால் கீர் கங்கா நதியின் நீர்மட்டம் உயர்ந்து அங்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி தாராலி கிராமத்தில் நான்கு பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த இயற்கை பேரழவில் மேலும் 14 பேர் புதைந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதையும் படிங்க : கர்ப்பிணியின் கன்னத்தில் அறைந்த மருத்துவர் – குழந்தை மரணம்…. உறவினர்கள் பகீர் குற்றச்சாட்டு




மாயமான 10 ராணுவ வீரர்கள் – தேடும் பணிகள் தீவிரம்
உத்தர்காசியில் வேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் பல வீடுகள் சேதமாகின. குறிப்பாக இந்த வெள்ளப்பெருக்கில் 25 ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் அடித்து சொல்லப்பட்டன. இதேபோல சுகி என்ற பகுதியிலும் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் பல வீடுகள் அடித்து செல்லப்பட்ட நிலையில் பலர் மாயமாகினர். இதற்கு இடையே உத்திர்காசியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஹர்சில் முகாமில் தங்கி இருந்த ராணுவ வீரர்கள் 10 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் மீட்பு பணியில் இறங்கி உள்ள பேரிடர் மீட்பு குழுவினர் மாயமான பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : Former Jharkhand CM Shibu Soren Death: ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரன் மறைவு.. பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் இரங்கல்!
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் உத்தரகாண்டில் பெய்த கனமழை காரணமாக அங்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.