Dausa Road Accident: ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து..10 பேர் உயிரிழப்பு!
Deadly Rajasthan Crash: ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில், காது ஷ்யாம் கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பயணம் செய்த வாகனம், பாபி அருகே கனரக வாகனத்தில் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்து, 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

ராஜஸ்தான், ஆகஸ்ட் 13: ராஜஸ்தானின் தௌசா (Dausa) மாவட்டத்தில் நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 12ம் தேதி ஒரு துயரமான சாலை விபத்து நடந்துள்ளது. காது ஷ்யாம் கோயிலில் (Khatu Shyam temple) வழிபட்டு திரும்பி வந்த பக்தர்கள் நிறைந்த பிக் அப் வேன் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் பாபி அருகே நிறுத்தப்பட்டிருந்த கனரக வாகனத்தின் மீது பலமாக மோதியது. இந்த பயங்கர மோதலில் இதுவரை 10 பக்தர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ALSO READ: மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு நாடகமாடிய கணவன்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!




காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை:
இந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த 9 பக்தர்கள் உடனடியாக ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயமடைந்த மீதமுள்ளவர்கள் தௌசா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் அரசின் உத்தரவின்படி, காயமடைந்த அனைவருக்கும் அரசு செலவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் வருத்தம்:
10 பக்தர்கள் உயிரிழந்துள்ள நிலையில் ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால் தனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார். மேலும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது மட்டுமின்றி, காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பது மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன்லால், “இது மிகவும் சோகமான சம்பவம். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்றார்.
ALSO READ: மனைவியின் சடலத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற கணவர்.. நாக்பூரில் அதிர்ச்சி சம்பவம்!
மாவட்ட ஆட்சியர், எஸ்பி விளக்கம்:
#WATCH | Rajasthan | Dausa District Collector Devendra Kumar says, “According to initial reports, 10 people have died in an accident near Bapi. 9 people have been referred for treatment and 3 are being treated in the District Hospital… The accident occurred between a passenger… pic.twitter.com/TAiXgdxIbx
— ANI (@ANI) August 13, 2025
இதுகுறித்து எஸ்பி சாகர் ராணா”காது ஷ்யாம் கோவிலில் இருந்து வரும் பக்தர்கள் விபத்தில் சிக்கியதாகவும், இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் கிடைத்தது. ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனைக்கு கிட்டத்தட்ட 7-8 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார். தொடர்ந்து தௌசா மாவட்ட ஆட்சியர் தேவேந்திர குமார் கூறுகையில், “பாபி அருகே நடந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 9 பேர் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.” என்றார்.