Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு நாடகமாடிய கணவன்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!

Rajasthan Man Kills Wife | ராஜஸ்தானை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு கொள்ளையர்கள் அறுத்ததாக நாடகமாடியுள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு நாடகமாடிய கணவன்.. விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 12 Aug 2025 07:24 AM

ராஜஸ்தான், ஆகஸ்ட் 12 : ராஜஸ்தானில் (Rajasthan) மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு கொள்ளையர்கள் கழுத்தை அறுத்ததாக மருத்துவமனையில் கணவர் நாடகமாடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அந்த நபரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு நாடகமாடிய கணவர்

ராஜஸ்தான் மாநிலம், அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள கிஷன்கரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உடலில் காயங்களுடன் ரோஹித் சைனி என்ற 35 வயது நபர் தனது 33 வயது மனைவி சஞ்சுவை கழுத்து அறுபட்ட நிலையில், சிகிச்சைக்காக அனுமதிக்க வந்துள்ளார். ஆனால், அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ரோஹித் சைனியின் உடலில் காயங்கள் இருந்த நிலையில், அதற்காக சிகிச்சையும் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க : ஆங்காங்கே கிடந்த உடல் பாகங்கள்.. பெண்ணின் உடலை 10 துண்டாக வெட்டிய கொடூரம்.. கர்நாடகாவில் பகீர்!

கிடுக்குப்பிடி விசாரணையில் தெரிய வந்த உண்மை

இந்த விவகாரம் குறித்து ரோஹித் சைனியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கொள்ளையர்கள் தங்களை தாக்கியதாகவும், மனைவியின் கழுத்தை அவர்கள் அறுத்ததாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அதாவது உண்மையை கண்டறிய ரோஹித் சைனியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது தான் இந்த சம்பவம் குறித்து பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : டெல்லியை புரட்டி எடுக்கும் கனமழை… சுவர் இடிந்து விழுந்து 8 பேர் உயிரிழப்பு!

தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார்

ரோஹித் சைனியிடம் போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் அவரது மனைவியை கொள்ளையர்கள் கழுத்தை அறுக்கவில்லை என்றும், அவர் தான் அறுத்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. அவரின் வாக்குமூலத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், இந்த சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக அந்த நபரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.