Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Uttarakhand Floods: உத்தரகண்ட் வெள்ளத்தில் மிஸ்ஸான 28 மலையாளிகள்.. நிலைமை என்ன..?

Tarali Village Cloudburst: உத்தரகாண்டின் தாராலி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 28 மலையாள சுற்றுலாப் பயணிகள் காணாமல் போனதாக செய்திகள் வெளிவந்த நிலையில், அனைவரும் உயிருடன் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Uttarakhand Floods: உத்தரகண்ட் வெள்ளத்தில் மிஸ்ஸான 28 மலையாளிகள்.. நிலைமை என்ன..?
தாராலி கிராமம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 06 Aug 2025 20:02 PM

உத்தரகண்ட், ஆகஸ்ட் 6: உத்தரகாசி மாவட்டத்தின் தாராலி கிராமத்தில் (Tarali village) ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு (landslides) மற்றும் இடிபாடுகள் ஏற்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கனமழைக்கு மத்தியிலும் இதுவரை நடந்த மீட்பு பணியில் 150 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்கு பிறகு, கேரளாவை சேர்ந்த 28 சுற்றுலா பயணிகள் காணாமல் போனதாக செய்திகள் வெளிவந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து காணாமல் போனவர்களின் குடும்பத்தார்கள் தெரிவிக்கையில், காணாமல் போன 28 பேரில் 20 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் அனைவரும் மகாராஷ்டிராவில் குடியேறிவிட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், மீதமுள்ள 8 பேர் கேரளாவின் வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

ALSO READ: உத்தரகாண்டில் பல்வேறு பகுதிகளில் மேக வெடிப்பு.. கொத்து கொத்தாக அடித்துச் செல்லப்பட்ட மக்கள்!

பாதுகாப்பாக உள்ள மலையாளிகள்:


உத்தரகண்டில் ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்கிய 28 மலையாளிகளும் பாதுகாப்பாக உள்ளதாக உத்தரகண்ட் மலையாளி சமாஜம் தலைவர் தினேஷ் தெரிவித்துள்ளார். ஓட்டுநரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் தற்போது கிடைத்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் அவர்கள் சிக்கித் தவிப்பதாகவும், வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். கொச்சியைச் சேர்ந்த நாராயணன் நாயர் மற்றும் ஸ்ரீதேவி பிள்ளை ஆகியோர் குழுவில் உள்ளனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கங்கோத்ரி அருகே அவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். சாலை சேதமடைந்துள்ளதால் திரும்பிச் செல்வது கடினம் என்று தெரிவித்தனர்.

ALSO READ: இந்திய எல்லையில் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்?.. ராணுவம் விளக்கம்!

இதுவரை 5 பேர் உயிரிழப்பு:


நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 5ம் தேதி பிற்பகல் தாராலி பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. நிலச்சரிவானது தாராலி கிராமத்தின் பாதி பகுதியை சேற்றிலும் நீரிலும் மூழ்கடிக்கப்பட்டதாகவும், இங்கு பல ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் நொறுங்கியதாகவும் தெரிவித்தன.