AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எம்.பி ஜோதிமணி குறித்த ஆபாச கருத்துக்கள்.. கரூர் மாவட்ட பாஜக தலைவர் மீது போலீசார் நடவடிக்கை..

பாஜக சார்பில் பிப்ரவரி 10ஆம் தேதி, “பெண்களுக்கு எதிராக திமுக ஆட்சியில் நடைபெறும் அநீதிக்கு எதிரான போராட்டம்” என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூரில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது, பாஜக கரூர் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் கலந்து கொண்டு, எம்.பி. ஜோதிமணி குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். மேலும், ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

எம்.பி ஜோதிமணி குறித்த ஆபாச கருத்துக்கள்.. கரூர் மாவட்ட பாஜக தலைவர் மீது போலீசார் நடவடிக்கை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 17 Feb 2026 07:03 AM IST

பிப்ரவரி 17, 2026: பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தொடர்பாக ஆபாசமாகவும் சர்ச்சைக்குரிய வகையிலும் சில கருத்துகளை கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையில், அவர்மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

எம்.பி ஜோதிமணி குறித்து ஆபாச கருத்துக்கள்:

பாஜக சார்பில் பிப்ரவரி 10ஆம் தேதி, “பெண்களுக்கு எதிராக திமுக ஆட்சியில் நடைபெறும் அநீதிக்கு எதிரான போராட்டம்” என்ற பெயரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூரில் நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினர் பலர் கலந்து கொண்டனர். அப்போது, பாஜக கரூர் மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் கலந்து கொண்டு, எம்.பி. ஜோதிமணி குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். மேலும், ஆபாசமாகவும் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: கொசுக்களுக்கு கொண்டாட்டம், மக்களுக்கு திண்டாட்டம்.. எகிறும் டெங்கு பாதிப்பு – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..

கண்டனம் தெரிவித்த ஜோதிமணி:

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு ஜோதிமணி பிப்ரவரி 14ஆம் தேதி தனது ‘எக்ஸ்’ (X) வலைதளப் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார். அவரது பதிவில், “பொதுவாழ்வில் ஒரு கட்சித் தலைவர் மீது உங்களுக்கு விமர்சனங்கள் இருந்தால், கருத்து ரீதியாக எதிர்கொள்ளுங்கள்; விமர்சியுங்கள். அதைச் செய்ய முடியாமல், ஒரு பெண்ணை ஆபாசமாக பொதுவெளியில் பேசுவது, பெண்களை எப்படியும் பேசலாம், பார்க்கலாம், விமர்சிக்கலாம் என்ற ஆபத்தான மற்றும் அருவருப்பான மனநிலையின் உச்சம்.

மேலும் படிக்க: தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்.. புதிய திட்டங்கள் அறிவிக்க வாய்ப்பு..

இது கடுமையான கண்டனத்துக்குரியது. பெண்களை உடலாக மட்டுமே பார்க்கும் ஆர்எஸ்எஸ்–பாஜக சித்தாந்தத்தின் வெளிப்பாடுதான் இது. இதற்கு பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என குறிப்பிட்டிருந்தார்.

செந்தில் நாதன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு:

செந்தில்நாதனின் இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், அதன் அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.