இந்தியாவில் தேர்தல்களில் யாரெல்லாம் வாக்களிக்கலாம்?.. விதிகள் கூறுவது என்ன?
Who Can Vote In Elections In India | இந்தியாவில் 5 மாநில தேர்தல்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் யார் யாரெல்லாம் வாக்களிக்கலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் விரைவில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் (Assembly Election) நடைபெற உள்ளது. இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு (Tamil Nadu), கேரளம் (Keralam), அசாம் (Assam), மேற்கு வங்கம் (West Bengal) மற்றும் புதுச்சேரி (Puducherry) ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்னும் ஒருசில நாட்களில் இந்த மாநிலங்கள் தேர்தலை சந்திக்க உள்ளன. இந்த நிலையில், இந்தியாவில் யாரெல்லாம் தேர்தலில் வாக்களிக்கலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்
| வ.எண் | மாநிலங்கள் | வாக்குப்பதிவு | வாக்கு எண்ணிக்கை |
| 1 | தமிழ்நாடு | 23 ஏப்ரல், 2026 | 04 மே, 2026 |
| 2 | கேரளம் | 09 ஏப்ரல், 2026 | 04 மே, 2026 |
| 3 | புதுச்சேரி | 09 ஏப்ரல், 2026 | 04 மே, 2026 |
| 4 | அசாம் | 09 ஏப்ரல், 2026 | 04 மே, 2026 |
| 5 | மேற்கு வங்கம் | 23 ஏப்ரல் 2026 மற்றும் 29 ஏப்ரல் 2026 | 04 மே, 2026 |
5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தேர்தல் விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.
இதையும் படிங்க : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நாளில் என்ன நடக்கிறது?



இந்தியாவில் யார் யாரெல்லாம் வாக்களிக்கலாம்
- இந்தியாவில் 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவரும் வாக்களிக்கலாம்.
- தேர்தலின்போது நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, பல்வேறு தொகுதிகளாக வரையறுக்கப்படும். இந்த நிலையில், ஒருவர் எந்த பகுதியில் வசிக்கிறாரோ அந்த பகுதிக்கான வாக்கு மையத்தில் மட்டுமே அந்த நபர் வாக்களிக்க அனுமதி வழங்கப்படும்.
- இந்திய தேர்தல் ஆணையம் வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை அல்லது வேறு ஏதேனும் அடையாள அட்டைகள் வைத்துள்ளவர்களால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும்.
- வாக்களிக்க செல்லும் நபர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது.
மேற்குறிப்பிட்ட இந்த தகுதிகளை உடையவர்கள் மட்டுமே இந்தியாவில் நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்க முடியும்.
இதையும் படிங்க : R. Gandhi Tamil Nadu Election: திமுகவின் சாதனை செம்மல்.. ராணிப்பேட்டையின் வெற்றி முகம்.. ஆர். காந்திக்கு மீண்டும் வசமாகுமா தொகுதி!
இந்தியாவில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும். எனவே அந்த நேரத்திற்குள் வாக்குப்பதிவு மையத்திற்கு செல்லும் நபர்களால் மட்டுமே வாக்களிக்க முடியும்.