Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

’நலமுடன் வாழ்க’ ஜக்தீப் தன்கர் ராஜினாமா.. பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

PM Modi On Jagdeep Dhankhar Resigns : குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்த நிலையில், அதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி, ஜக்தீப் தன்கர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

’நலமுடன் வாழ்க’ ஜக்தீப் தன்கர் ராஜினாமா.. பிரதமர் மோடி சொன்ன விஷயம்!
பிரதமர் மோடி - ஜகதீப் தன்கர்Image Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 22 Jul 2025 14:01 PM

டெல்லி, ஜூலை 22 :  நல்ல ஆரோக்கியத்துடன் ஜக்தீப் தன்கர் இருக்க வாழ்த்துகிறேன் என பிரதமர் மோடி (PM Modi) தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ஜக்தீப் தன்கர் (Jagdeep Dhankhar) ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான கடிதத்தை 2025 ஜூலை 21ஆம் தேதியான நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் வழங்கி இருக்கிறார். அரசியலமைப்பின் பிரிவு 67 (A)-ன் படி, ராஜினாமா செய்ததாக ஜக்தீப் தன்கர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். உடல்நலக் காரணங்களை கூறி, அவர் ராஜினாமா செய்துளளார். ஜக்தீப் தன்கரின் ராஜினாமாவை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்ட நிலையில், பிரதமர் மோடி அதுபற்றி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதன்படி, ” நாட்டுக்கு சேவை ஆற்ற ஜக்தீப் தன்கருக்கு குடியரசுத் துணைத் தலைவர் உட்பட பல்வேறு வாய்ப்புகள் கிடைத்தன. அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துகிறேன்” என குறிப்பிட்டு இருக்கிறார்.

ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்த பின், தனது முதல் கருத்தாக பிரதமர் மோடி இவ்வாறு கூறியிருக்கிறார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் சூழலில், குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்தது பேசும் பொருளாக மாறியுள்ளது. இதனை அடுத்து, அடுத்த குடியரசுத் தலைவரை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Also Read : ஜக்தீப் தன்கரின் ராஜினாமா.. அடுத்த துணை ஜனாதிபதி யார்?

பிரதமர் மோடி ட்வீட்

அடுத்த துணை ஜனாதிபதி யார்?

அந்த வகையில், ஜெபி. நாட்டா, மனேஜ் சின்ஹா உள்ளிட்வர்களின் பெயர்கள் லிஸ்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை துணை ஜனாதிபதி பதவிக்கு நியமிக்க வேண்டும் என அம்மாநில பாஜக தலைமை கூறி வருகிறது.

பாஜக சார்பில் தான் குடியரசுத் துணைத் தலைவர் நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளது. குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்போருக்கு சில முக்கிய தகுதிகள் உள்ளன. அதன்படி பார்த்தால், குடியரசுத் துணை தலைவராக தேர்வு செய்யப்படுபவர் எந்த ஒரு அரசுப் பதவியிலும் இருக்கக் கூடாது.

35 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். துணை ஜனாதிபதியை நாடாளுமன்ற எம்.பிக்கள் தேர்வு செய்வார்கள். மாநிலங்களவை, மக்களவை எம்பிக்கள் அனைவரும் வாக்களித்து துணை குடியரசுத் தலைவரை தேர்வு செய்வார்கள். எனவே, இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படலாம்.

Also Read : உடல்நலக்குறைவு காரணமாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா

ஜக்தீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்து, தற்போது மழைக்கால கூட்டத் தொடர் நடந்து வருவதால், ராஜ்சயபாவை அதன் துணைத் தலைவர் ஹர்வன்ஸ் வழிநடத்துகிறார். வி.வி. கிரி மற்றும் ஆர்.வெங்கடராமன் ஆகியோரைத் தொடர்ந்து ராஜினாமா செய்த மூன்றாவது துணைத் தலைவர் தன்கர் ஆவார். குறிப்பாக, உடல்நலக் காரணங்களுக்கான குடியரசுத் துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த முதல் நபர் தன்கர் என்பது குறிப்பிடத்தக்கது.