Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Operation Sindoor : ஆபரேஷன் சிந்தூரில் ராணுவத்தினருக்கு பால், டீ கொண்டு சென்ற சிறுவன்.. கல்வி செலவை ஏற்ற ராணுவம்!

Indian Army Funds Little Boy's Education | ஆபரேஷன் சிந்தூரில் ராணுவ வீரர்களுக்கு பால், டீ, லெஸி உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்ற 10 வயது சிறுவனின் மொத்த கல்வி செலவையும் ஏற்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. ராணுவத்தின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Operation Sindoor : ஆபரேஷன் சிந்தூரில் ராணுவத்தினருக்கு பால், டீ கொண்டு சென்ற சிறுவன்.. கல்வி செலவை ஏற்ற ராணுவம்!
ராணுவத்திற்கு உதவிய சிறுவன்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 21 Jul 2025 08:49 AM

சண்டிகர், ஜூலை 21 : பாகிஸ்தானுக்கு (Pakistan) எதிராக இந்திய ராணுவம் (Indian Army) நடத்திய ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) தாக்குதலில் இந்திய வீரர்களுக்கு பால், டீ உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்ற சிறுவனின் கல்வி செலவு மொத்தத்தையும் இந்திய ராணுவம் (Indian Army) ஏற்றுள்ளது. அத்தகைய பரபரப்பான சூழலில் ராணுவ வீரர்களுக்கு உணவு பொருட்களை எடுத்து சென்ற சிறுவனின் துணிச்சலை பாராட்டி இதனை செய்துள்ளதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. இந்திய ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு  பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில்,பலர் அதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து இந்தியா – பாகிஸ்தான் இடையே கடும் மோதல் நிலவி வந்த நிலையில், அது போராக மாறியது. அதன்படி ஆபரேஷன் சிந்தூரை கையில் எடுத்த இந்திய ராணுவம், பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது.

இதையும் படிங்க : இந்தியா கூட்டணிக்கு குட்பை.. அதிர்ச்சி கொடுத்த ஆம் ஆத்மி.. அரசியலில் பரபரப்பு!

குறிப்பாக பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டதாக அரசு அறிவித்தது. இவ்வாறு இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

ராணுவ வீரர்களுக்கு பால், டீ கொண்டு சென்ற சிறுவன் – கல்வி செலவை ஏற்ற ராணுவம்

இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்டபோது பஞ்சாப் மாநிலத்தின் பெரோஷ்பூர் மாவட்டம் தாரா வாலி கிராமம் அருகே சர்வதேச எல்லையில் சில ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது ராணுவ வீரர்களுக்கு சாவான் சிங் என்ற சிறுவன் பால், டீ, ஐஸ் கிரீம், லெஸி உள்ளிட்ட உணவு பொருட்களை எடுத்துச் சென்றுள்ளார்.

அந்த சிறுவனுக்கு 10 வயதே ஆன நிலையில், அவர் யாருடைய தூண்டுதலும் இன்றி இந்திய ராணுவத்தின் மீது கொண்ட அதீத பற்று காரணமாக இந்த செயலை செய்துள்ளார். இந்த நிலையில், இந்திய ராணுவத்தின் மேற்கு படைப்பிரிவு தளபதி மனோஜ் குமார் சிறுவனை நேரில் அழைத்து பாராட்டினார். இந்த நிலையில், சிறுவனின் கல்வி செலவு முழுவதையும் ஏற்பதாக ராணுவம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.