Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

காலா பட நடிகையின் சகோதரர் கொடூர கொலை… டெல்லியில் பயங்கரம்.. நடந்தது என்ன?

Actor Huma Qureshi Cousin Murder : ரஜினியின் காலா படத்தில் நடித்த ஹுமா குரேஷியின் சகோதரர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இருசக்கர வாகனத்தை பார்க் செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சையில், அவர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.

காலா பட நடிகையின் சகோதரர் கொடூர கொலை… டெல்லியில் பயங்கரம்.. நடந்தது என்ன?
ஹுமா குரேஷியின் சகோதரர் கொலை
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 08 Aug 2025 11:27 AM

டெல்லி, ஆகஸ்ட் 08 : காலா பட நடிகை ஹுமா குரேஷியின் (Huma Qureshi)  சகோதரர் வெட்டிக் கொலை (Huma Qureshi Cousin Murder) செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்க்கிங் தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையால், ஹுமா குரேஷியின் சகோதரர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் காலா. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார் ஹுமா குரேஷி. இவரது சகோதரர் ஆசிப். இவர் தனது மனைவியுடன் டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் வசித்து வருகிறார்.  ஆசிப் 2025 ஆகஸ்ட் 7ஆம் தேதியான நேற்று இரவு இரண்டு பேர் கொண்ட கும்பலால் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். வீட்டின் அருகே அவர் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இருசக்கர வாகனத்தை பார்க்கிங் செய்வது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் ஆசிபை இரண்டு பேர் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதனை அடுத்து, அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. ஆசிப் கொலை செய்யப்பட்டதை அறிந்த அவரது மனைவி, வீட்டிற்குள் இருந்து வெளியே வந்துள்ளார். ஆசிப் ரத்த வெள்ளத்தில் கிடந்ததே பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி, உடனே அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஆசிப் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

Also Read : தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்… தோட்டத்தில் கிடந்த சடலங்கள்.. கேரளாவை அதிர வைத்த சீரியல் கில்லர்!

காலா பட நடிகையின் சகோதரர் வெட்டிக் கொலை


இது தொடர்பாக தற்போது இரண்டு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் கூற்றுப்படி, இருசக்கர வாகனத்தை பார்க்கிங் செய்து தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும், ஆசிப்புக்கும் சில நாட்களாகவே பிரச்சனை நிலவி வந்துள்ளது. இரு தரப்பினரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

2025 ஆகஸ்ட் 8ஆம் தேதியான நேற்று இரவு 10 மணி அளவில் ஆசிப் தனது வீட்டிற்கு முன்பு இருசக்கர வாகனத்தை பார்க் செய்துள்ளார். அப்போது, வாகனத்தை அங்கிருந்து அவர் அகற்றுமாறு இரண்டு பேர் கூறி இருக்கின்றனர். ஆனால் இதற்கு ஆசிப் மறுப்பு தெரிவித்த நிலையில், அவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தில், மோதல் பயங்கரமாக ஏற்பட்டுள்ளது.

Also Read  : 17 ஆண்டுகள் பகை.. தந்தை கொலைக்கு பழிதீர்த்த மகன்.. சென்னையில் அதிர்ச்சி!

வாக்குவாதம் நீடித்த நிலையில், இரண்டு பேர் ஆசிபை வெட்டி வெட்டி உள்ளனர். இதில் அவர் உயிரிழந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.  கைதான இருவரும் உஜ்வால் (19) மற்றும் கௌதம் (18) என அடையாளம் காணப்பட்டனர். கொலை தொடர்பான பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 103 இன் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.