Thrissur Viral Video: போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸ்.. நடு ரோட்டில் ஓடி ஓடி அனுப்பி வைத்த பெண் காவல்துறை அதிகாரி!
Kerala Police Officer: திருச்சூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு உதவிய ASI அபர்ணாவின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அவர் தனது துணிச்சலான செயலால் நெரிசலைக் களைந்து ஆம்புலன்ஸை செல்ல வழி செய்தார். இது அவரது மனிதாபிமானத்தையும் அர்ப்பணிப்பையும் காட்டுகிறது.

திருச்சூர், ஆகஸ்ட் 11: கேரளாவை அடுத்த திருச்சூரில் (Thrissur) போக்குவரத்து நெரிசலில் சிக்கிய ஆம்புலன்ஸை (Ambulance) சரி செய்ய, அதற்கு முன்னால் ஓடி சென்ற பெண் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அபர்ணா லவகுமாரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், பாராட்டுகளை பெற்று வருகிறது. அபர்ணா பல ஆண்டுகளாக மனிதாபிமானத்தின் அடிப்படையில் பல விஷயங்களையும் செய்துள்ளார் என்று பலருக்கு தெரியாது. மெடி ஹப் ஹெல்த்கேர் ஆம்புலன்ஸ் திருச்சூரில் இருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (Medical College) ஒருவரை ஏற்றி கொண்டு சிகிச்சை அளிக்க வந்துள்ளது. அப்போது, அந்த ஆம்புலன்ஸ் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சிக்கி கொண்டது.
அந்த நேரத்தில், அங்கு வந்த ஏ.எஸ்.ஐ அஸ்வினி ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்டது. பின்னால், இருந்து வந்த அபர்ணா, முன்னாள் ஓடி வாகனங்களுக்கு வழிவிட கடுமையாக உழைத்தார். ஆம்புலனஸ் ஓட்டுநர் பைசலுடன் இருந்த இர்ஃபான் தனது செல்போனில் இந்த காட்சிகளை பதிவு செய்துள்ளார். மேலும், இந்த காட்சிகள் காவல்துறையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் வைரலானது.
ALSO READ: அமெரிக்காவுக்கு ஸ்மார்ட்போன் அதிகம் வழங்கும் நாடு இந்தியா – அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பெருமிதம்
வைரலான வீடியோ:
View this post on Instagram
போக்குவரத்து நெரிசலின் போது அவசரகாலத்தில் நோயாளியை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் முன் அபர்ணா ஓடும் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் கடந்த 2025 ஆகஸ்ட் 9 ம் தேதி மதியம் 1:30 மணியளவில் திருச்சூரில் உள்ள கொலோத்தும் பதார்த்தில் உள்ள அஸ்வினி சந்திப்பில் நடந்தது
கடந்த ஆண்டு நடந்த காவல்துறையினர் தடகள போட்டியில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் முதலிடம் பெற்ற அபர்ணாவுக்கு, சரியான நேரத்தில் கடமையை செய்ததற்காக கமிஷனர் ஆர். இளங்கோ, இப்படி ஒரு சேவைக்காக பாராட்டினார்.
ALSO READ: ஏர் இந்தியா விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு.. சென்னையில் அவசரமாக தரையிறக்கம்!
இது முதல் முறையல்ல..
அபர்ணா தனது செயல்களுக்காக கைதட்டல்களைப் பெறுவது இது முதல் முறை அல்ல. சிகிச்சையின்போது இறந்த ஒரு பெண்ணின் உடல் பணக் பற்றாக்குறையால் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாதபோது, அபர்ணா தனது தங்க வளையலை கழற்றி உறவினர்களிடம் அடகு வைத்தார். அதேபோல், புற்றுநோய் நோயாளிகளுக்கு விக் தைக்க, தனது தலைமுடியை வெட்டி கவனத்தை ஈர்த்திருந்தார்.