Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

’அனைத்து உதவியும் செய்வோம்’ நிமிஷா பிரியா வழக்கு.. வெளியுறவுத்துறை விளக்கம்

Nimisha Priya Case : கேரள செவிலியர் நிமிஷா பிரியா வழக்கில் இந்தியா எடுத்த நடவடிக்கை குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம் அளித்துள்ளார். நிமிஷா பிரியா வழக்கில் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாக வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

’அனைத்து உதவியும் செய்வோம்’ நிமிஷா பிரியா வழக்கு.. வெளியுறவுத்துறை விளக்கம்
நிமிஷா பிரியா வழக்குImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 17 Jul 2025 18:28 PM

டெல்லி, ஜூலை 17 : கேரள செவிலியர் நிமிஷா பிரியா வழக்கில் (Nimisha Priya Case) இந்தியா எடுத்த நடவடிக்கை குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம் அளித்துள்ளார்.  அவர் கூறுகையில், “இது ஒரு உணர்வுபூர்வமான விஷயம், இந்த வழக்கில் இந்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. மேலும் குடும்பத்திற்கு உதவ ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளோம். நாங்கள் வழக்கமான தூதரக வருகைகளையும் ஏற்பாடு செய்துள்ளோம். பிரச்சினையைத் தீர்க்க உள்ளூர் அதிகாரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். ஏமனில் உள்ள உள்ளூர் அதிகாரிகள் அவரது தண்டனையை நிறைவேற்றுவதை ஒத்திவைத்துள்ளனர். நாங்கள் இந்த விஷயத்தை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குகிறோம். சில நட்பு அரசாங்கங்களுடனும் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

கேரள செவிலியர் ஏமன் சிறையில் உள்ளார். தலால் அப்து மாஹதி என்பவரை கொலை செய்த வழக்கில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதனை 2025 ஜூலை 16ஆம் தேதி நிறைவேற்றப்பட இருந்த மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, இந்தியா எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Also Read : அயர்லாந்து: 796 குழந்தைகள் கழிவுநீர் குழிக்குள் புதைக்கப்பட்ட கொடூர உண்மை!

வெளியுறவுத்துறை விளக்கம்

நிமிஷா பிரியா வழக்கு

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. இவர் 2017ஆம் ஆண்டு ஏமனுக்கு சென்ற அவர், அங்கிருக்கும் பல்வேறு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்திருக்கிறார். இதனை அடுத்து, சொந்தமான கிளினிக் ஒன்றையும் வைக்க முடிவு செய்தார். ஏமன் நாட்டின் சட்டப்படி, சொந்தமாக கிளினிக் வைப்பதற்கு உள்ளூர் நபர் கூட்டாளியாக இருக்க வேண்டும். அதன்படி, 2014 இல் தலால் அப்த மாஹதியுடன் தொடர்பு கொண்டார்.

தலால் அப்து மாஹதியுடன் கிளினிக்கை திறந்தார். அதன்பிறகு, மாஹதி, நிமிஷா பிரியாவின் பாஸ்போர்ட் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை எடுத்து வைத்து அவரை துன்புறுத்தியதாக தெரிகிறது. எனவே, 2017ஆம் ஆண்டு மாஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து, ,தனது பாஸ்போர்ட்டை மீட்க முயன்றானர். அப்போது, அதிகமாக மயக்க மருந்து கொடுத்ததால், மாஹதி உயிரிழந்ததாக தெரிகிறது.

இதனை அடுதது, மாஹதி கொலை வழக்கில் நிமிஷா பிரியா 2017ல் கைதான நிலையில், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மரண தண்டனையை 2024ல் ஜனாதிபதி உறுதி செய்தார்.  எனவே, இவருக்கு 2026 ஜூலை 16ஆம்  தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. தற்போது அது ஒத்திவைக்கப்பட்டு, மாஹதி குடும்பத்தினருடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

Also Read : கராச்சி: அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பிரபல நடிகை… நடந்தது என்ன?

அந்நாட்டு விதிப்படி, மாஹதி குடும்பத்தினர் ரத்தப் பணத்தை வழங்கினால், நிமிஷா பிரியா மரண தண்டனையில் இருந்து தப்பிக்கலாம். ஆனால், ரத்தப் பணத்தை வாங்க மாஹதி குடும்பத்தினர் தொடர்ந்து மறுத்து வருவதாக தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.