ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்..
பொங்கல் பண்டிகை கொண்டாட இன்னும் சில நாட்களில் இருக்கக்கூடிய நிலையில், தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய ரேஷன் கடைகளில் மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று வருகின்றனர். அந்த வகையில் ராமேஸ்வரத்தில் இருக்கக்கூடிய ராம்கோ பி.என் ரேஷன் கடையில் பொங்கல் பரிசுகளை மக்கள் பலரும் டோக்கன்களை கொடுத்து மகிழ்ச்சியுடன் பெற்று வருகின்றனர்.
2026 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு தரப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, வேட்டி, சேலை, உடன் மூன்றாயிரம் ரூபாய் ரொக்க பணம் வழங்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ரொக்கப் பணம் வழங்கப்படாத நிலையில் இந்த ஆண்டு வழங்கப்படுகிறது. இது மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழலில் பொங்கல் பண்டிகை கொண்டாட இன்னும் சில நாட்களில் இருக்கக்கூடிய நிலையில், தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய ரேஷன் கடைகளில் மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்று வருகின்றனர். அந்த வகையில் ராமேஸ்வரத்தில் இருக்கக்கூடிய ராம்கோ பி.என் ரேஷன் கடையில் பொங்கல் பரிசுகளை மக்கள் பலரும் டோக்கன்களை கொடுத்து மகிழ்ச்சியுடன் பெற்று வருகின்றனர்.