Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியாவுக்கான விசா, தூதரக சேவைகளை நிறுத்திய வங்காளதேச அரசு.. முக்கிய அறிவிப்பு!

Bangladesh Stopped Visa and Embassy Services | வங்காளதேசத்தில் இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவது குறித்து இந்தியாவில் சில இடங்களில் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக இந்தியாவுக்கான விசா மற்றும் தூதரக சேவையை வங்காளதேச அரசு நிறுத்தியுள்ளது.

இந்தியாவுக்கான விசா, தூதரக சேவைகளை நிறுத்திய வங்காளதேச அரசு.. முக்கிய அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Jan 2026 23:48 PM IST

டாக்கா, ஜனவரி 08 : வங்காளதேசத்தில் (Bangladesh) கடந்த சில மாதங்களாக கடும் கலவரம் ஏற்பட்டு வருகிறது. அங்கு மாணவர் இயக்க தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி என்ற இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்படதை தொடர்ந்து அங்கு வன்முறை வெடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, இந்த விவகாரம் தொடர்பாக அங்குள்ள இந்திய தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் திபு சந்திர தாஸ் என்ற நபர் அடித்து கொலை செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து இந்து மதத்தை சேர்ந்த சிலர் மீது மிக கடுமையான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியா – வங்காளதேசம் இடையே அதிகரித்துள்ள பதற்றம்

இவ்வாறு வங்காளதேசத்தில் இந்துக்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கருத்து கூறி வருகின்றன. இதற்கிடையே தான் வங்காளதேசத்தில் இந்து இளைஞர்கள் கொல்லப்பட்டதை எதிர்த்து இந்தியாவில் சில போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக டெல்லியில் உள்ள வங்காளதேச தூதரகத்திற்கு வெளிடே குவிந்த போராட்டக்காரர்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க : ரூ.12 லட்சம் கடன்…தாய்க்கு மகன் செய்த பேருதவி…சமூக வலைதளங்களில் குவியும் பராட்டு!

விசா சேவையை நிறுத்தி வைத்த வங்காளதேச அரசு

வங்காளதேசத்தில் நடைபெற்ற சம்பவங்களுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற போராட்டங்கள் காரணமாக இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையே தூதரக ரீதியாக பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், வங்காளதேச அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது, இந்தியர்களுக்கான விசா மற்றும் தூதரக சேவைகளை பாதுகாப்பு காரணமாக நிறுத்தி வைப்பதாக வங்காளதேச அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : வெனிசுலா அட்டாக்.. தங்கம் விலை தாறுமாறா அதிகரிக்குமா? என்ன நடக்கபோகுது?