Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூ.12 லட்சம் கடன்…தாய்க்கு மகன் செய்த பேருதவி…சமூக வலைதளங்களில் குவியும் பராட்டு!

17 Year Old Son Pays Mother Loan: தனுது தாய் பெற்ற ரூ. 12 லட்சம் கடனை 17 வயது மகன் செலுத்தி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் வாழத்து தெரிவித்தனர்.

ரூ.12 லட்சம் கடன்…தாய்க்கு மகன் செய்த பேருதவி…சமூக வலைதளங்களில் குவியும் பராட்டு!
தாயின் ரூ.12 லட்சம் கடனை அடைத்த 17 வயது மகன்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 05 Jan 2026 12:46 PM IST

சமூக வலைதளங்களில் தாய்-மகனின் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், தாயின் ரூ.12 லட்சம் கடனை அவரது 17 வயது மகன் அடைத்தது தொடர்பான விவரம் அந்த வீடியோவில் உள்ளது. இந்த வீடியோவை அமன் துக்கல் என்பவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் 17 வயது சிறுவன் தனது தாயிடம் உங்கள் மீது உள்ள ரூ. 12 லட்சம் கடனை அடைத்துள்ளதாக கூறுகிறார். இதனை கேட்ட அந்த சிறுவனின் தாய் பதற்றத்துடன், உணர்ச்சி பொங்க தனது நன்றியை தெரிவிக்கிறார். அப்போது, அந்த சிறுவன் தனது வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்த பெண் என்று தனது தாயே அழைக்கிறார். இதற்கு நானும் உன்னை நேசிக்கிறேன். ஆனால், நான் எதற்காக அழுகிறேன் என்று எனக்கு தெரியவில்லை என்று இந்த சிறுவனின் தாய் கூறுகிறார்.

தாயிடம் ரூ.12 லட்சத்தை கொடுத்த சிறுவன்

பின்னர், சிறுவன் அமன் தனது தாயின் கண்ணீரை துடைத்து பணத்தை தாயிடம் கொடுக்கிறார். அது உன் எல்லாம் கடன்களுக்கும், அதற்கான வட்டிகளுக்கும் செலுத்திக் கொள்ளலாம் என்று கூறுகிறார். இதில், அந்த சிறுவன் கூறுகையில், என் அம்மா எனக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் கொடுத்திருக்கிறார். இறுதியாக நான் அவளை கவனித்துக் கொள்ள முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உணர்கிறேன்.

மேலும் படிக்க: வெனிசுலா அட்டாக்.. தங்கம் விலை தாறுமாறா அதிகரிக்குமா? என்ன நடக்கபோகுது?

ஒரு வருடம் கழித்து நடந்த நிகழ்வு

இந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இந்த தருணத்தை நான் பலமுறை காட்சிப்படுத்தினேன். அது இறுதியாக ஒரு வருடம் கழித்து நடைபெற்றுள்ளது. நான் நம்ப முடியாத அளவுக்கு நன்றி உள்ளவனாக இருக்கிறேன். கடவுளுக்கும், என் அம்மாவுக்கும் நன்றி கூறுகிறேன் என்று கூறினார். இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இதில், அந்த சிறுவனின் தாயின் மீதான அன்பையும், நன்றியையும் பலர் பாராட்டி வருகின்றனர்.

வைரல் வீடியோவுக்கு பலரும் பாராட்டு

அந்த வீடியோவில் பதிவிடப்பட்டுள்ள ஒரு கமெண்ட்டில் உங்களுக்கு மரியாதை அண்ணா, நான் ஏழு வயதாக இருந்தபோது என் அம்மாவை இழந்தேன். இது போன்ற ஒன்றை செய்ய நான் எதையும் செய்வேன் என்று பதிவிட்டுள்ளார். இதேபோல, மற்றொரு கமெண்டில் புராணக்கதை இந்த காணொளி அருமையாக உள்ளது. இந்த தருணத்தை பகிர்ந்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், வாழ்த்துக்கள் சகோதரா. உங்களால் முடியாத போது உங்களை கவனித்துக் கொண்ட நபரை கவனித்துக் கொள்கிறேன் என்று தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.

மேலும் படிக்க: அமெரிக்கா – வெனிசுலா விவகாரம்.. அவசர கூட்டத்தை கூட்டும் ஐநா பாதுகாப்பு கவுன்சில!