அமெரிக்கா – வெனிசுலா விவகாரம்.. அவசர கூட்டத்தை கூட்டும் ஐநா பாதுகாப்பு கவுன்சில!
UN Security Council Hold Emergency Meeting Today | வெனிசுலா மற்றும் அதன் அதிபர் மீது அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விவாதம் மேற்கொள்ள ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று அவரச கூட்டத்தை கூட்டுகிறது.
நியூயார்க், ஜனவரி 05 : வெனிசுலாவில் (Venezuela) இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு (America) போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். இந்த நிலையில், வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் திடீர் வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில், வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரே மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸை அமெரிக்க ராணுவம் கைது செய்து நாடு கடத்தியதாக டிரம்பே அறிவித்திருந்தார்.
இவ்வாறு வெனிசுலா மீதும் அதன் அதிபர் மீதும் டிரம்ப் மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகள் உலக அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், அமெரிக்கா – வெனிசுலா விவகாரம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை இன்று (ஜனவரி 05, 2026) கூட்ட உள்ளது. இந்த கூட்டத்தின் முக்கியத்துவங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
உலக நாடுகளின் வரவேற்புகளும், எதிர்ப்புகளும்
அமெரிக்கா, வெனிசுலா மீது தாக்குதல் நடத்தியது குறித்து ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்திய அரசு இதற்கு வருத்தம் தெரிவித்த நிலையில், நிலமையை கவனித்து வருவதுடன் வெனிசுலா மக்களின் நலனுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறோம் என்றும் தெரிவித்துள்ளது. வெனிசுலா, அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்துவதற்கு எதிராக தாக்குதல் நடத்தியதாக கூறிக்கொள்ளும் நிலையில், வெனிசுலாவில் உள்ள எண்னெய் மற்றும் பிற வளங்களை குறி வைத்து அமெரிக்கா இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது என்று உலக நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.
இதையும் படிங்க : இனி கிரீன் கார்டு பெற அமெரிக்கரை திருமணம் செய்தால் மட்டும் போதாது.. டிரம்ப் நிர்வாகத்தின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்
அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள ஐநா
வெனிசுலா விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், ஐநா பொது சபையின் தலைவரான அன்னலேனா பேயர்போக் வெனிசுலா விவகாரம் குறித்து பேசினார். அப்போது கூறிய அவர், ஐநா சாசனத்திற்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டியது கட்டாயம். அது இஷ்டத்திற்கு செயல்படுவதற்கானது அல்ல. ஐநா சபையின் நோக்கங்களுக்கு எதிராக எந்த வகையிலும் நாடுகள் செயல்படாமல் தவிர்க்க வேண்டும் என்று சுட்டி காட்டியுள்ளார்.
இதையும் படிங்க் : விரைவில் உலகம் அழியும்.. பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தி வந்த நபர் கைது
இந்த நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சில் இன்று (ஜனவரி 05, 2026) காலை 10 மணிக்கு அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் கூட்டம் நடைபெறும் என கவுன்சில் தலைமை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.