Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விரைவில் உலகம் அழியும்.. பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தி வந்த நபர் கைது!

Ebo Noah Arrested | எபோ நோவா 2025, ஆக்ஸ்ட் மாதம் பைபிளில் கூறப்பட்டுள்ள நோவாவின் பெரிய மர பேழை போல ஒரு பேழையை உருவாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதன் மூலம் இவர் உலக அளவில் பிரபலமாக தொடங்கினார்.

விரைவில் உலகம் அழியும்.. பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தி வந்த நபர் கைது!
கைது செய்யப்பட்ட எபோ நோவா
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Jan 2026 10:56 AM IST

கானா, ஜனவரி 02 : ஆப்ரிக்காவின் (Africa) மேற்கு பகுதியில், கினியா வளைகுடா உள்ளது. அதன் கடற்கரையில் அமைந்துள்ள நாடு தான் கானா. இந்த நாட்டின் தலைநகரம் அக்ரா. இந்த பகுதியை சேர்ந்த இவான்ஸ் எஷூன் என்ற நபர், மக்களை பீதியடைய செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை எபோ நோவா என்று கூறிக்கொண்டு, டிசம்பர் 25, 2025 அன்று உலகம் அழியும் என கூறி பொதுமக்களை பீதியடைய செய்து வந்ததன் குற்றத்திற்காக தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யார் இந்த எபோ நோவா என கூறிக்கொள்ளும் இவான்ஸ் எஷூன்?

எபோ நோவா 2025, ஆக்ஸ்ட் மாதம் பைபிளில் கூறப்பட்டுள்ள நோவாவின் பெரிய மர பேழை போல ஒரு பேழையை உருவாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதன் மூலம் இவர் உலக அளவில் பிரபலமாக தொடங்கினார். நோவாவின் காலத்தில் ஏற்பட்டத்தை போல மூன்று ஆண்டுகளுக்கு வெள்ளப்பெருக்கு வரும் என்று கூறி மக்களை மனம் திரும்புமாறு அவர் அழைப்பு விடுத்து வந்தார். எபோ நோவா குறித்து பொதுமக்கள் தெரிந்துக்கொண்ட நிலையில், அவரது ஊர் சுற்றுலா தளமாக மாறியது. குறிப்பாக அவர் பேழை செய்துக்கொண்டு இருந்த இடத்தை ஏராளமான் பொதுமக்கள் பார்வையிட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க : முற்றிய மோதல்.. வெனிசுலாவின் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்.. டிரம்ப் பரபரப்பு தகவல்

 விரைவில் உலகம் அழியும் என பீதியை கிளப்பிய எபோ நோவா

முன்னதாக டிசம்பர் 25, 2025 கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகம் அழியும் என கூறி வந்த அவர், கிறிஸ்துமஸ் தினத்தில் தன்னை சந்திக்க வந்த மக்களிடம் கடவுள் தனது வேண்டுதலின் அடிப்படையில் உலகை அழிக்கும் முடிவை மாற்றிக்கொண்டுள்ளார். அவர் விரைவில் உலகை அழிக்க உள்ளார். நான் மேலும் சில பேழைகளை உருவாக்க போகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் கடும் அதிர்ச்சிக்கு உள்ளான பொதுமக்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதையும் படிங்க : ரஷ்ய அதிபர் புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல் நடத்த உக்ரைன் முயற்சி.. ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு!

உலகம் அழிய உள்ளதாக பொதுமக்களை பீதியடைய செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த அவரை போலீசார் டிசம்பர் 31, 2025 அன்று கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்த்க்க்து.