வெனிசுலா அட்டாக்.. தங்கம் விலை தாறுமாறா அதிகரிக்குமா? என்ன நடக்கபோகுது?
Will Gold Price Hike Due To Venezuela Attack | அமெரிக்க அரசு வெனிசுலாவில் பல்வேறு முக்கிய பகுதிகளை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் காரணமாக புவிசார் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
தங்கம் (Gold) விலை பங்குச்சந்தை (Share Market), புவிசார் பதற்றங்கள் (Geo Political Tension) ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. பொதுவாக உலக நாடுகள் மத்தியில் அமைதி நிலவினால் அப்போது தங்கம் விலை மிக சீராக இருக்கும். இதுவே உலக நாடுகளுக்கு இடையே ஏதேனும் போர் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படும் பட்சத்தில் தங்கத்தின் விலை சரசரவென உயரும். தற்போது அத்தகைய நிலை தான் ஏற்பட்டுள்ளது. காரணம் அமெரிக்கா (America), வெனிசுலா (Venezuela) மீது தாக்குதல் நடத்தியதியுள்ளது. நேற்று (ஜனவரி 03, 2026) காலையில் குறைந்த தங்கம் விலை, அமெரிக்காவின் தாக்குதல் காரணமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், வெனிசுலாவை அமெரிக்கா தாக்கியுள்ளது, இந்தியாவில் தங்கத்தின் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்ட அமெரிக்கா
அமெரிக்கா அரசு வெனிசுலா நாட்டின் மீது திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது. வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. வெனிசுலாவின் பல்வேறு பகுதிகளில் அமெரிக்காவின் குண்டு மழை பொழிந்துள்ளது. குறிப்பாக வெனிசுலாவின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், அதிபர் மாளிகை, ராணுவ தளங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை குறி வைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பரபரப்பானா சூழல் நிலவி வரும் நிலையில், புவிசார் பதற்றம் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க : விரைவில் உலகம் அழியும்.. பொதுமக்களிடம் பீதியை ஏற்படுத்தி வந்த நபர் கைது!




காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
அமெரிக்கா, வெனிசுலா மீது தாக்குதல் நடத்தியுள்ளது புவிசார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தங்கம் விலை உயர்வை சந்தித்துள்ளது. நேற்று காலையில், கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.12,520-க்கும், ஒரு சவரன் ரூ.1,00,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் அமெரிக்கா, வெனிசுலா மீது தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியதன் காரணமாக தங்கம் மாலையில் உயர்வை சந்தித்தது. மாலையில் தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,600-க்கும், ஒரு சவரன் ரூ.1,00,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் தங்கம் விலை உயர்வை சந்தித்த நிலையில், அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையேயான இந்த பதற்றமான சூழல் தங்கம் விலையை மேலும் அதிகரிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் தங்கம் விலை மேலும் அதிகரிக்குமா?
அமெரிக்க அரசு வெனிசுலா மீது தாக்குதல் நடத்தியுள்ள்து மட்டுமன்றி, அமெரிக்க ராணுவம் வெனிசுலா அதிபரையும் அவரது மனைவியையும் சிறை பிடித்து நாடு கடத்தி இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் (America President Trump) அறிவித்தார். டிரம்பின் இந்த பரபரப்பான தகவல் உலக அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா அரசாங்கத்தின் இந்த அதிர்ச்சியூட்டும் நடவடிக்கைகள் மூலம் உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட உலோகங்களின் விலையில் மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இதையும் படிங்க : புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்து -40க்கும் மேற்பட்டோர் பலி – ஸ்விட்சர்லாந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
இத்தகைய பதற்றமான சூழலுக்கு மத்தியில் தான் நேற்று (ஜனவரி 03, 2026) தங்கம் விலை மாலையில் உயர்வை சந்தித்தது. தங்கம் மட்டுமன்றி வெள்ளியும் நேற்று மாலை விலை உயர்வை சந்தித்துள்ளது. அதாவது காலையில் ஒரு கிராம் ரூ.256 என்று விற்பனை செய்யப்பட்ட வெள்ளி மாலையில் ரூ.1 விலை உயர்ந்து ஒரு கிராம் ரூ.257-க்கும், ஒரு சவரன் ரூ.2,57,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
இன்று (ஜனவரி 04, 2026) ஞாயிற்று கிழமை என்பதால் தங்கம் விலையில் எந்த வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் ரூ.12,600-க்கும், ஒரு சவரன் ரூ.1,00,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளியும் விலையில் எந்த வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.257-க்கும், ஒரு சவரன் ரூ,2,57,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாளை (ஜனவரி 05, 2026) திங்கள் கிழமை என்பதால் அமெரிக்கா – வெனிசுலா விவகாரத்தின் எதிரொலியாக தங்கம் அதிரடியாக விலை உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.