Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் 8வது ஊதியக்குழு.. முக்கிய அம்சங்கள் என்ன என்ன?

8th Pay Commission From January 2026 | மத்திய அரசு 8வது ஊதியக்குழுவுக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஜனவரி 1, 2026 முதல் அது அமலுக்கு வர உள்ளது. இந்த நிலையில், அதன் முக்கிய அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் 8வது ஊதியக்குழு.. முக்கிய அம்சங்கள் என்ன என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 30 Dec 2025 12:04 PM IST

மத்திய அரசு 8வது ஊதியக்குழுவுக்கு (8th Pay Commission) ஒப்புதல் அளித்துள்ளது. அது ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வர உள்ளது. இந்த 8வது ஊதியக்குழு அமலுக்கு வருவதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். மாத ஊதியம் வாங்கும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் நபர்கள் சம்பள உயர்வு, அகவிலைப்படி உயர்வு ஆகியவற்றை பெற உள்ளனர். இந்த நிலையில், 8வது ஊதியக்குழு அமலுக்கு வருவதன் மூலம் ஊழியர்களுக்கு எவ்வளவு அகவிலைப்படி உயர்வு (DA – Dearness Allowance) வழங்கப்படும், ஓய்வூதியம் உயர்த்தப்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

8வது ஊதியக்குழு என்றால் என்ன?

ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்களின் மாத வருமானம், அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை மாற்றி அமைக்கும். 7வது ஊதியக்குழு டிசம்பர் 31, 2025 உடன் முடிவடையும் நிலையில், ஜனவரி 1, 2026 முதல் இந்த புதிய மற்றும் 8வது ஊதியக்குழு அமலுக்கு வர உள்ளது. ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மட்டுமன்றி அவர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்வு ஆகியவையும் பண வீக்கத்தின் அடிப்படையில் தீர்மானம் செய்யப்படும்.

இதையும் படிங்க : டிசம்பர் 31-ல் கிக் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.. அமேசான், ஸ்விக்கி உள்ளிட்ட ஊழியர்கள் எடுத்த முக்கிய முடிவு!

எவ்வளவு ஊதிய உயர்வை ஊழியர்கள் எதிர்ப்பார்க்கலாம்

ஊதியக்குழுவில் சம்பள உயர்வு வழங்கப்படுவதற்கு சில முக்கிய காரணிகள் அடிப்படையாக உள்ளன. கடந்த முறை வழங்கப்பட்ட உயர்வு மற்றும் தற்போதைய பொருளாதார நிலை ஆகியவற்றை மையப்படுத்தி இந்த உயர்வுகள் வழங்கப்படும். 6வது ஊதியக்குழு 40 சதவீதம் உயர்வை தந்த நிலையில், 7வது ஊதியக்குழு 23 முதல் 25 சதவீதம் வரை உயர்வை தந்துள்ளது. இந்த நிலையில், 8வது ஊதியக்குழு 20 முதம் 35 சதவீதம் வரை உயர்வை வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : Income Tax : வருமான வரி ரீஃப்ண்ட் இன்னும் வரவில்லையா?.. இதை செய்யவில்லை என்றால் சிக்கல் தான்!

அரசு ஊழியர்கள் பண வீக்கத்தை எதிர்க்கொள்ளும் விதமாக தான் இந்த ஊதியக்குழுக்கள் மூலம் உயர்வு வழங்கப்படுகிறது. பொதுவாக அகவிலைப்படி உயர்வு அடிப்படை ஊதியத்தை மையப்படுத்தி வழங்கப்படும். இந்த நிலையில், இந்த 8வது ஊதியக்குழுவில் மாக்த வருமானம் அகவிலைப்படி ஆகிய இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.