Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியாவுக்கு மேலும் 500% வரி?.. மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த டிரம்ப்.. அடுத்து என்ன?

India to Get 500 Percentage Tariff From America | இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா தொடார்ந்து எச்சரித்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்தியாவுக்கு மேலும் 500% வரி?.. மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த டிரம்ப்.. அடுத்து என்ன?
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 Jan 2026 08:31 AM IST

வாஷிங்டன், ஜனவரி 09 : இந்தியா (India) தன்னுடை பெரும்பாலான எண்ணெய் தேவைகளை ரஷ்யாவிடமிருந்து (Russia) பூர்த்தி செய்துக்கொள்கிறது. இது அமெரிக்காவுக்கு (America) பிடிக்காமல் இருந்து வருகிறது. அதன் காரணமாக இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் (Crude Oil) வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து இந்தியாவை வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதன் காரணமாக, உக்ரைன் போருக்கு (Ukraine War) மறைமுகமாக நிதியளிப்பதாகவும் டிரம்ப் தொடர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வந்தார்.

இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்த நிலையில் தான், அமெரிக்காவில் தனது பொருட்களை இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு இறக்குமதி வரி விதித்து டிரம்ப் நிர்வாகம் அறிவித்தது. அந்த வகையில் முதலில் இந்தியாவுக்கு 50 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. பிறகு, ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியா மீது டிரம்ப் கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்தார். இதன் காரணமாக இந்தியா மீது அமெரிக்கா தற்போது 50 சதவீத வரியை அமலில் வைத்துள்ளது.

இதையும் படிங்க : ‘நான் நிரபராதி.. கடத்தப்பட்டுள்ளேன்’ – அமெரிக்கா நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்படுத்திய நிக்கோலஸ் மதுரோ

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுக்ளுக்கு 500% வரி

என்னதான் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது குறித்து அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வந்தாலும், இந்தியா தனது நடவடிக்கையில் இருந்து பின்வாங்காமல் உள்ளது. இந்த நிலையில் தான், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு சுமார் 500 சதவீதம் இறக்குமதி வரி விதிப்பேன் என்று டொனால்ட் டிரம்ப் கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இதையும் படிங்க : ரூ.12 லட்சம் கடன்…தாய்க்கு மகன் செய்த பேருதவி…சமூக வலைதளங்களில் குவியும் பராட்டு!

அந்த வகையில், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீதம் இறக்குமதி வரி விதிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) ஒப்புதல் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் அடுத்த வாரமே மசோதா தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேலும் 500 சதவீதம் வரி விதிக்கும் அபாயம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.