Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு கிடையாது.. கொலை செய்யப்பட்ட நபரின் சகோதரர் பகீர் தகவல்.. அடுத்து என்ன நடக்கும்?

Nimisha Priya's Death Sentence | கேரளா செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஜூலை 16, 2025 அன்று நிறைவேற்றப்பட இருந்த நிலையில், அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நிமிஷா விடுதலை செய்யப்படுவதற்கான சாத்திய கூறுகள் இருந்த நிலையில், கொலை செய்யப்பட்டவரின் சகோதரரின் கருத்து நிமிஷா வழக்கை மேலும் சிக்கல் நிறைந்ததாக மாற்றியுள்ளது.

நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு கிடையாது.. கொலை செய்யப்பட்ட நபரின் சகோதரர் பகீர் தகவல்.. அடுத்து என்ன நடக்கும்?
நிமிஷா பிரியா
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 17 Jul 2025 08:05 AM

ஏமன், ஜூலை 17 : ஏமனின் கொலை வழக்கில் சிறையில் உள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் கூறியுள்ள கருத்துக்கள் நிமிஷாவின் மரண தண்டனையில் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. அப்தோ மஹ்தியின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கும் பட்சத்தில் நிமிஷாவுக்கு மரண தண்டனையில் இருந்து விலக்கு கிடைக்கும் என கூறப்பட்டு வந்த நிலையில், அப்தோ மஹ்தியின் சகோதரர் ஃபத்தா மஹ்தி நிமிஷா பிரியாவை மன்னிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று கூறியுள்ளார். இது நிமிஷாவுக்கு மேலும் நெருக்கடியாக மாறியுள்ளது. இந்த நிலையில், நிமிஷா பிரியாவின் மரண தண்டனை குறித்து  ஃபத்தா மஹ்தி கூறியது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

ஏமனில் தூக்கு தண்டனை பிடியில் சிக்கியுள்ள நிமிஷா பிரியா

கேரள மாநிலம் கோட்டைத்தை சேர்ந்த செவிலியரான நிமிஷ பிரியா, கணவர் மற்றும் குழந்தைகளுடன் ஏமனின் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து நிமிஷா பிரியா கிளினிக் ஒன்றை தொடங்கியுள்ளார். இதில் நிமிஷா பிரியாவுக்கும், அப்தோ மஹ்திக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நிமிஷா பிரியா அவருக்கு மயக்க ஊசி செலுத்தி உள்ளார்.

அதிக அளவில் மயக்க மருந்து செலுத்தப்பட்ட நிலையில் அந்த நபர் உயிரிழந்துள்ளார். இது கொலை வழக்கமாக மாறிய நிலையில் நிமிஷா பிரியா கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த ஏமன் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது. அதன்படி நிமிஷா பிரியாரின் மரண தண்டனை ஜூலை 16, 2025 அன்று நிறைவேற்ற பட இருந்தது. இந்த நிலையில் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்தி வைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.

மன்னிக்கும் மனம் இல்லை – திட்டவட்டமாக மறுத்த ஃபத்தா மஹ்தி

அப்தோது மஹ்தியின் குடும்பத்தினர் நிமிஷா பிரியாவை மன்னித்தால் அவருக்கு மரண தண்டனையில் இருந்து விடுதலை கிடைக்கும். அதற்கு பதிலாக நிமிஷாவின் குடும்பத்தினர் பிளட் மணி (Blood Money) கொடுக்க வேண்டும். நிமிஷாவை மீட்பதற்காக அவரது தாய் மற்றும் மேலும் சிலர் போராடி வருகின்றனர். இதற்கிடையே மரண தண்டனையை நீதிமன்றம் தள்ளி வைத்த நிலையில், நிமிஷாவுக்கு விளக்கு அளிக்கப்படும் என்று குடும்பத்தினர் நம்பிக்கையில் இருந்து வந்தனர். இந்த நிலையில், ஃபத்தா மஹ்தியின் கருத்துக்கள் அவர்களது நம்பிக்கையில் இடியை இறக்கியுள்ளது.

இதையும் படிங்க : நிமிஷா பிரியாவின் மரண தண்டனையைத் தடுக்க ஏமன் உச்ச நீதிமன்றத்தில் தீவிர பேச்சுவார்த்தை: கருணைக்கு ஒரு கடைசி வாய்ப்பு!

இது குறித்து கூறியுள்ள ஃபத்தா மஹ்தி, நிமிஷா பிரியாவின் வழக்கறிஞர் சொன்ன குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது. நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அவரை மன்னிப்பதற்கான முயற்சிகள் குறித்த எங்கள் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது. இந்த வழக்கில் கடவுளின் சட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். அதை விட குறைவான எதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் கூறியுள்ளார். இதன் மூலம் தனக்கு நிமிஷா பிரியாவை மன்னிக்கும் எண்ணம் இல்லை என்பதை அவர் உறுதி படுத்தியுள்ளார். அவரின் இந்த கருத்து நிமிஷா வழக்கை மேலும் சவாலாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.