2026ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சந்திர கிரகணம் குறித்து இந்து மதத்தில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் தியானம் மற்றும் பிரார்த்தனைகள் மூலம் வாழ்க்கையில் உள்ள எதிர்மறை சக்திகள் நீங்க வேண்டும் என சந்திர பகவானை வழிபடுவது வழக்கம். 2026ஆம் ஆண்டில் மொத்தம் நான்கு கிரகணங்கள் நிகழ்ந்தாலும், இந்தியாவில் காணப்பட உள்ள ஒரே சந்திர கிரகணம் இதுவாகும். இதனால் இந்த சந்திர கிரகணம் சிறப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த முதல் சந்திர கிரகணம் மார்ச் 3ஆம் தேதி, செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி, சந்திர கிரகணத்தின் நிழல் நிலை பிற்பகல் 2 மணி 16 நிமிடத்திற்கு தொடங்குகிறது. அன்று மாலை 6 மணி 26 நிமிடம் முதல் 6 மணி 46 நிமிடம் வரை உச்சத்தை அடைகிறது.