உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் பட்டியலில் பெரும்பாலும் தொழிலதிபர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம் பெறுவார்கள். ஆனால், எந்த தொழில் பின்னணியும் இல்லாமல் உலகின் மிகப் பெரிய செல்வந்தராக இருக்கிறார் தாய்லாந்து நாட்டின் மன்னர் மகா வஜிரலோங்கோர்ன். இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ஐம்பது பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்றும், இந்திய மதிப்பில் சுமார் நாற்பத்தைந்து லட்சம் கோடி ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. தாய்லாந்து முழுவதும் அவரிடம் நிலங்கள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள், அரண்மனைகள் மற்றும் ஓய்விடங்கள் இருக்கின்றன