Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிறுமிகளை துப்பாக்கி முணையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி.. 6 பேரை சுட்டுக் கொன்ற நபர் அதிரடி கைது!

American Man Killed 6 with Gun | அமெரிக்காவை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர் தனது வீட்டில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக தனது வீட்டில் இருந்த மூவரை சுட்டுக் கொலை செய்த நிலையில், 7 வயது சிறுமி, பாதிரியார் உட்பட மேலும் மூன்று பேரை கொலை செய்துள்ளார்.

சிறுமிகளை துப்பாக்கி முணையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி.. 6 பேரை சுட்டுக் கொன்ற நபர் அதிரடி கைது!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 11 Jan 2026 11:40 AM IST

மிஸ்ஸிஸிப்பி, ஜனவரி 11 : அமெரிக்காவின் (America) மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் உள்ள ஜாக்சன் பகுதியில் இருந்து சுமார் 150 கிலோ மீட்டர்கள் வடமேற்கு வெஸ்ட் பாயிண்ட் என்ற இடத்திற்கு மேற்கு பகுதியில் செடார்பிளப் என்ற இடம் உள்ளது. இந்த பகுதியில் வசித்து வந்த 24 வயது இளைஞர் ஒருவர், தனது குடும்பத்தில் ஏற்பட்ட தகராறின் காரணமாக பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை செய்துள்ளார். அதாவது அந்த இளைஞர் 6 பேரை சுட்டுக் கொலை செய்துள்ளார். இந்த கொடூர சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

குடும்ப உறுப்பினர்களை சுட்டுக் கொலை செய்த இளைஞர்

வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த இளைஞர் தனது தந்தை, மாமா மற்றும் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துவிட்டு, பின்னர் தனது சகோதரரின் காரை திருடி எடுத்துக்கொண்டு பிளே ரோடு பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவர், அங்கிருந்த 7 வயது சிறுமியை துப்பாக்கி முணையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அது நடக்காத நிலையில், அவர் அந்த 7 வயது சிறுமியை சுட்டுக் கொலை செய்துவிட்டு அங்கிருந்துச் சென்றுள்ளார். பிறகு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு 7 வயது சிறுமியையும் அவர் கொலை செய்ய முயற்சி செய்த நிலையில், அது நடக்காததால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதையும் படிங்க : பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு.. கணித ஆசிரியைக்கு கிடைத்த வாழ்நாள் தண்டனை!

பாதிரியார் உட்பட 2 பேரை சுட்டுக் கொலை செய்த நபர்

அதன்பின்னர் சிலோவம் – கிரிப்பித் சாலைக்கு சென்ற அந்த நபர் எதிரே வந்த இரண்டு சகோதரர்களை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். அவர்களில் ஒருவர் பாதிரியார் என்பது தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார், அந்த நபரை பிடிக்கும் பணியில் இறங்கினர். அதன்படி, அதிகாலை 3 மணி அளவில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க : நேபாளத்தில் தொடரும் பதட்டம்.. இந்திய எல்லை மூடல்.. என்ன நடக்கிறது?

அந்த நபர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அமெரிக்காவில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவமாக இது உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.