Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்று பூமிக்கு அருகில் வரும் வியாழன்.. வெறும் கண்களால் பார்க்கலாம்.. நாசா விஞ்ஞானிகள் சொன்ன சுவாரஸ்ய தகவல்கள்!

Planet Jupiter Is Approaching Earth | சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோளான வியாழன் பூமிக்கு அருகில் வர உள்ளது. இதன் காரணமாக அதனை இன்று (ஜனவரி 09, 2026) வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று பூமிக்கு அருகில் வரும் வியாழன்.. வெறும் கண்களால் பார்க்கலாம்.. நாசா விஞ்ஞானிகள் சொன்ன சுவாரஸ்ய தகவல்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 09 Jan 2026 10:22 AM IST

வாஷிங்டன், ஜனவரி 09 : பூமியுடன் (Earth) சேர்த்து மொத்தம் ஒன்பது கோள்கள் சூரிய குடும்பத்தில் (Solar System) உள்ளன. அதில் ஐந்தாவது கோளாக உள்ளது தான் வியாழன் (Jupiter). இது சூரிய குடும்பத்தில் உள்ள மிகப்பெரிய கோளாக உள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பூமியை போல சுமார் 1,300 கோள்களை வியாழனில் அடக்கிவிட முடியுமாம். அந்த அளவுக்கு வியாழன் சூரிய குடும்பத்தின் மிகப்பெரிய கோளாக உள்ளது. இந்த நிலையில், வியாழன் கோளை வெறும் கண்களால் பார்க்கும் வாய்ப்பு மனிதர்களுக்கு கிடைத்துள்ளது. அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பூமிக்கு அருகில் வரும் பிரம்மாண்ட வியாழன் – நாசா கணிப்பு

சூரிய குடும்பத்தின் மிகப்பெரியதாக உள்ள வியாழன் கோளை சுற்றி, 75-க்கும் மேற்பட்ட துணை கோள்கள் சுற்றி வருவதாக ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர். பூமிக்கும், வியாழனுக்கும் சுமார் 63.3 கோடி கிலோ மீட்டர்கள் தூரம் உள்ளது. இந்த நிலையில்,  இந்த கோளின் நகர்வு குறித்து அமெரிக்க விண்வெளி மையமான நாசா (NASA – National Aerounatics and Space Administration) விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தான் அவர்கள் ஒரு சுவாரஸ்யத்தை கண்டுபிடித்துள்ளனர். அதாவது நாசாவின் இந்த ஆய்வில் பிரம்மாண்ட வியாழன் பூமிக்கு அருகில் வர உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நேபாளத்தில் தொடரும் பதட்டம்.. இந்திய எல்லை மூடல்.. என்ன நடக்கிறது?

வியாழனை வெறும் கண்களால் பார்க்கலாம்

வியாழன் பூமியை நெருங்கி வருவது குறித்து நாசா விஞ்ஞானிகள் சில முக்கிய தகவல்களை தெரிவித்துள்ளனர். அதாவது, வியாழன் கோளானது பூமியை நோக்கி நெருங்கி வருவது தெரிய வந்துள்ளது. எனவே இன்று (ஜனவரி 09, 2026) வியாழன் கோளை வெறும் கண்களால் கூட பார்க்க முடியும் என்று கூறியுள்ளனர். சூரியன் மறைந்த பிறகு கிழக்கு திசையில் ஜெமினி விண்மீன் கூட்டத்துக்கு அருகில் இந்த கோளை காணலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : ‘நான் நிரபராதி.. கடத்தப்பட்டுள்ளேன்’ – அமெரிக்கா நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்படுத்திய நிக்கோலஸ் மதுரோ

ஒரே நேர்கோட்டில் வரும் மூன்று கோள்கள்

இதேபோல நாளை (ஜனவரி 10, 2026) சூரியன், வியாழன் மற்றும் பூமி ஆகிய மூன்று கோள்களும் ஒரே நேர் கோட்டில் காணப்படும் என்று நாசா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.