லடாக் மாநிலத்தின் கார்கில் மாவட்டத்தில் அமைந்துள்ள டிராஸ் கிராமம், இந்தியாவின் மிகவும் குளிரான பகுதியாக அறியப்படுகிறது. உலகிலேயே இரண்டாவது மிகக் குளிரான மக்கள் வசிக்கும் இடமாகவும் டிராஸ் பெயர் பெற்றுள்ளது. குளிர்காலங்களில் இங்கு வெப்பநிலை மைனஸ் 40 டிகிரி செல்சியஸுக்கும் கீழ் குறையக்கூடும். ஸ்ரீநகர் முதல் கார்கில் செல்லும் பாதையில் பலர் கவனிக்காமல் கடந்து செல்லும் ஒரு பெயர்ப் பலகையாக மட்டுமே டிராஸ் இருக்கிறது.