Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரஷ்ய அதிபர் புதினை நாடு கடத்த திட்டமா?.. அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம்!

Is America going to arrest Putin like Nichols Maduro | வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அவரது மனைவியுடன் சேர்த்து கைது செய்து அமெரிக்கா நாடு கடத்தியுள்ளது. இந்த நிலையில், மதுரோவை போலவே ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கமளித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புதினை நாடு கடத்த திட்டமா?.. அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 11 Jan 2026 14:05 PM IST

வாஷிங்டன், ஜனவரி 11 : வெனிசுலா (Venezuela) நாட்டிற்குள் அமெரிக்க (America) ராணுவம் அதிரடியாக நுழைந்து அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ (Nicholas Maduro) மற்றும் அவரது மனைவியை கைது செய்து நாடு கடத்தியது போல, ரஷ்ய அதிபர் புதினை (Russia President Putin) நாடு கடத்தும் வாய்ப்பு உள்ளதா என எழுப்பபட்ட கேள்விக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) விளக்கமளித்துள்ளார். இந்த நிலையில், செய்தியாளர்களின் கேள்விக்கு டிரம்ப் அளித்துள்ள விளக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

டிரம்ப் மத்தியஸ்திற்கு பிடி கொடுக்காமல் இருக்கும் ரஷ்யா

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க அதிபர் டிரம்ப் மத்தியஸ்தம் செய்து வருகிறார். ஆனால், டிரம்ப் நிர்வாகம் முன்மொழியும் அமைதி ஒப்பந்தங்களை ரஷ்யா ஏதேனும் கரணங்கள் கூறி நிராகரித்து வருகிறது. இதன் காரணமாக இன்றும் கூட ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நிலவி வருகிறது.

இதையும் படிங்க : பிரதமர் மோடியுடன் நல்ல நட்பு.. ஆனாலும்.. வரி விதிப்பு குறித்து பேசிய டொனால்ட் டிரம்ப்!

வெனிசுலா அதிபரை கைது செய்து நாடு கடத்திய டிரம்ப்

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெனிசுலாவுக்கு நுழைந்த அமெரிக்க ராணுவம் அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவை அவரது மனைவியுடன் கைது செய்து நாடு கடத்தி நியூயார்க்கில் உள்ள சிறையில் அடைத்துள்ளது. இதற்கு சில உலக தலைவர்கள் ஆதரவும், சில உலக தலைவர்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக உக்ரைன் அதிபார் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, சர்வாதிகாரியை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதற்கு நிகோலஸ் மதுரோ சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. அடுத்து அமெரிக்காவுக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியும். விரைவில் ரஷ்ய அதிபர் புதினை கைது செய்து நாடு கடத்துவார்கள் என்று அவர் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு.. கணித ஆசிரியைக்கு கிடைத்த வாழ்நாள் தண்டனை!

புதினை நாடு கடத்தும் திட்டமில்லை – டிரம்ப்

இது குறித்து விளக்கமளித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவுக்குள் புகுந்து புதினை நாடு கடத்தும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார். ரஷ்யா உடன் அமெரிக்கா நல்ல உறவை கொண்டுள்ளது. ஆனால் எனக்கு ஏமாற்றம் தான். நான் உலக நாடுகள் இடையேயான 8 போர்களை நிறுத்தியுள்ளேன். என்னால் உக்ரைன் – ரஷ்யா போரை நிறுத்த முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.