பிரதமர் மோடியுடன் நல்ல நட்பு.. ஆனாலும்.. வரி விதிப்பு குறித்து பேசிய டொனால்ட் டிரம்ப்!
Donald Trump About PM Narendra Modi | இந்தியா மீது அமெரிக்கா தற்போது 50 சதவீத வரியை அமலில் வைத்துள்ளது. இந்த நிலையில், நான் விதித்துள்ள வரிகளால் இந்திய பிரதமர் மோடி மகிழ்ச்சியாக இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன், ஜனவரி 07 : ரஷ்யாவிடமிருந்து (Russia) கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (America President Donald Trump) 50 சதவீதம் வரி விதித்துள்ளார். இதன் காரணமாக இந்தியாவின் பல்வேறு துறைகள் கடும் சிரமங்களை எதிர்க்கொண்டு வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், எந்த வித முன்னேற்றமும் ஏற்படாமல் உள்ளது. இந்த நிலையில், நான் விதித்துள்ள வரிகளால் இந்திய பிரதமர் மோடி (Indian Prime Minister Modi) தற்போது மகிழ்ச்சியாக இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா மீது 50 சதவீதம் வரி விதித்த அமெரிக்கா
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு வரி விதித்து அமெரிக்க அரசு பட்டியல் வெளியிட்டது. அந்த பட்டியலில் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க : அமெரிக்கா – வெனிசுலா விவகாரம்.. அவசர கூட்டத்தை கூட்டும் ஐநா பாதுகாப்பு கவுன்சில!




ஆனால் இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25 சதவீதம் வரி விதித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார். இதன் காரணமாக தற்போது இந்தியாவுக்கு 50 சதவீத வரியை அமெரிக்கா அமலில் வைத்துள்ளது. இந்த நிலையில் தான், டொனால்ட் டிரம்ப் அது குறித்து தனது செய்தியாளர் சந்திப்பில் பேசியுள்ளார்.
வரிகளால் பிரதமர் மோடி தற்போது மகிழ்ச்சியாக இல்லை – டிரம்ப்
இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீதம் வரியை அமலில் வைத்துள்ள நிலையில், அது குறித்து டொனால்ட் டிரம்ப் பேசியுள்ளார். அதாவது, அடிப்படையில் இந்தியர்கள் என்னை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என விரும்புகிறார்கள். மோடி ஒரு மிகச்சிறந்த நபர். நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது அவருக்கு தெரியும். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது முக்கியம். அவர்கள் ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகம் செய்கிறார்கள்.
இதையும் படிங்க : வெனிசுலா அட்டாக்.. தங்கம் விலை தாறுமாறா அதிகரிக்குமா? என்ன நடக்கபோகுது?
நாம் இந்தியா மீதான வரியை மிக விரைவாக உயர்த்த முடியும். அது அவர்களுக்கு மோசமாக இருக்கும். நான் விதித்துள்ள வரிகளால் இந்திய பிரதமர் மோடி தற்போது மகிழ்ச்சியாக இல்லை என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.