அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு தொழுகை.. விசாரணை வளையத்தில் காஷ்மீர் நபர்!
Namaz in Ram Mandir: அபு அகமது ஷேக் மனநிலை காரணமாக, சிகிச்சை மற்றும் பராமரிப்புக்காக அவர் அடிக்கடி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்று வருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இது மட்டுமின்றி, இந்த வழக்கைக் கையாளும் போது குடும்பத்தின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளுமாறு அதிகாரிகளிடம் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அயோத்தியில் உள்ள ராமர் கோயில் (Ram Mandir) வளாகத்திற்குள் தொழுகை நடத்திய காஷ்மீரை (Kashmir) சேர்ந்த 55 வயதான இஸ்லாமிய நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், அயோத்தியிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அபு அகமது ஷேக்கின் குடும்பத்தினர் தற்போது அவர் யார் என்று தெரிவித்துள்ளனர். அபு அகமது ஷேக் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும், கடந்த 6 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வருவதாகவும் குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், கைது செய்யப்பட்ட நபர் ஷோபியன் மாவட்டத்தில் உள்ள கடபோரா கிராமத்தில் வசித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: மும்பையில் ஐஎஸ்ஐ ஆதரவுடன் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை…மாநிலத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு!




அபு அகமது ஷேக் மனநிலை காரணமாக, சிகிச்சை மற்றும் பராமரிப்புக்காக அவர் அடிக்கடி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் சென்று வருவதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இது மட்டுமின்றி, இந்த வழக்கைக் கையாளும் போது குடும்பத்தின் சூழ்நிலைகளைக் கருத்தில் கொள்ளுமாறு அதிகாரிகளிடம் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். விசாரணை முடிந்ததும் கூடுதல் தகவல்கள் பகிரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அயோத்தி முழுவதும் போலீசார் குவிப்பு:
📍Shri Ram Janmabhoomi Temple, Ayodhya
Kashmiri resident Ahmed Sheikh detained for attempting to offer namaz inside the premises.
Heavy security | Commandos deployed | Mandatory bag & body checks in progress. #Rammandir #ahmedsheikh #namazpic.twitter.com/pbUUhnJul7
— Kushal Sharma (@KushalSharma_89) January 10, 2026
சந்தேகத்திற்கிடமான நபர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ராம் ஜன்மபூமி தரிசன மார்க் மற்றும் பிற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தி சிஓ அசுதோஷ் திவாரி இதுகுறித்து கூறுகையில், ”பக்தர்கள் அதிக அளவில் கூடுவதால், அயோத்தி பகுதி மண்டலங்கள் மற்றும் துறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. எல்லா இடங்களிலும் போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் அனைத்தையும் கண்காணித்து வருகிறோம்” என்றார்.
ALSO READ: நைஜரில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 5 இந்தியர்கள்…8 மாதங்களுக்கு பிறகு நாடு திரும்பினர்!
காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை:
இன்று அதாவது 2026 ஜனவரி 10ம் தேதி அயோத்தி ராமர் கோயில் வளாகத்திற்குள் வெளியேறும் வாயிலுக்கு வெளியே தொழுகை நடத்தப்படுவதாக வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. தொழுகை நடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, அபு அகமது ஷேக்கை போலீசார் கைது செய்தனர். கோவில் வளாகத்தில் பணியமர்த்தப்பட்டிருந்த காவலாளி ஒருவர் சந்தேக நபர் குறித்து தகவல் தெரிவித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட காஷ்மீர் நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். புலனாய்வு அமைப்புகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.