நைஜரில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 5 இந்தியர்கள்…8 மாதங்களுக்கு பிறகு நாடு திரும்பினர்!
Indians Kidnapped At Niger: மேற்கு ஆப்பிரிக்காவில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட ஜார்க்கண்டைச் சேர்ந்த 5 புலம்பெயர் தொழிலாளர்கள் 8 மாதங்களுக்கு பிறகு இந்தியா திரும்பினர், இவர்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் ஜனவரி 14- ஆம் தேதிக்குள் வீடு திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜிரியாவில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 5 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இறுதியாக விடுவிக்கப்பட்டு இந்தியாவுக்குத் திருப்பி வந்துள்ளனர். கல்பதாரு பவர் டிரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நைஜருக்கு குடிபெயர்ந்த அவர்கள், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. அனைத்து தொழிலாளர்களும் நைஜரில் உள்ள கேபிடிசி திட்டத்தில் கல்பதாரு டிரான்ஸ்மிஷன் லைன் நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்டனர். கடந்த ஏப்ரல் 25- ஆம் தேதி, அவர்கள் ஆயுதமேந்திய நபர்களால் கடத்தப்பட்டனர், அன்றிலிருந்து அவர்கள் காணாமல் போனர். இது தொடர்பாக முதல்வர் ஹேமந்த் சோரன் உத்தரவைத் தொடர்ந்து, மாநில புலம்பெயர்ந்தோர் கட்டுப்பாட்டு அறை உடனடியாக தொழிலாளர்கள் பணிபுரிந்த தனியார் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, அவர்கள் இருக்கும் இடம் குறித்த தகவல்களைச் சேகரித்து, அவர்களை விடுவிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளைத் தொடங்கியது.
இந்திய திரும்பிய 5 நபர்கள்
இதைத் தொடர்ந்து, புலம்பெயர்ந்தோர் கட்டுப்பாட்டு அறை, ராஞ்சியில் உள்ள புலம்பெயர்ந்தோர் பாதுகாவலர், நைஜரில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டது. இதில், கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக சிறை பிடிக்கப்பட்டிருந்த 5 தொழிலாளர்களும் இறுதியாக விடுவிக்கப்பட்டு இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். மாநில புலம்பெயர்ந்தோர் கட்டுப்பாட்டு அறை 5 தொழிலாளர்களுடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் தற்போதைய நிலை குறித்து அறிந்துள்ளது.
மேலும் படிக்க: உங்கள் வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றம் அரசால் கண்காணிக்கப்படுகிறதா?.. விளக்களித்த மத்திய அரசு..




வீடு திரும்ப சில நாள்கள் ஆகும்
மேலும், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பிற தேவையான நடவடிக்கைகளை முடிந்த பிறகு, தொழிலாளர்களை விமானம் மூலம் ஜார்க்கண்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவர். கடந்த ஏப்ரல் 25- ஆம் தேதி முதல் காணாமல் போன 5 புலம் பெயர்ந்த தொழிலாளர்களும் பாதுகாப்பாக திரும்பிவிட்டனர் என்று மாநில புலம் பெயர்ந்தோர் கட்டுப்பாட்டு அறையின் குழுத் தலைவர் ஷிகா லக்ரா கூறினார். சில பணிகள் இன்னும் முடிவடையாததால் அவர்கள் வீடு திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும் என்று அவர் மேலும் கூறினார்.
ஜனவரி 14-ஆம் தேதிக்குள் ஊர் திரும்புவர்
அந்த தொழிலாளர்கள் தற்போது மும்பையில் உள்ளனர், கட்டாய சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தேவையான அரசு மற்றும் சட்ட முறைகளை பூர்த்தி செய்துள்ளனர். ஜனவரி 14 ஆம் தேதிக்குள் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடத்தப்பட்டவர்களில் சஞ்சய் மஹதோ, ஃபல்ஜித் மஹதோ, ராஜு மஹதோ மற்றும் கிரிதிஹ் மாவட்டத்தின் பகோதர் காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட டோண்ட்லோ பஞ்சாயத்தைச் சேர்ந்த சந்திரிகா மஹதோ மற்றும் முந்த்ரோ பஞ்சாயத்தின் உத்தம் மஹதோ ஆகியோர் ஆவர்.
மேலும் படிக்க: மத்திய பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்படும்? – வெளியான சூப்பர் தகவல்