Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மும்பையில் ஐஎஸ்ஐ ஆதரவுடன் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை…மாநிலத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு!

Terror Attack Planned In Mumbai: மும்பையில் ஐஎஸ்ஐ பயங்கரவாத அமைப்பின் ஆதரவுடன் குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக உளவுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை தொடர்ந்து மாநிலம் முழுவதும் உச்சக் கட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது .

மும்பையில் ஐஎஸ்ஐ ஆதரவுடன் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை…மாநிலத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு!
மும்பையில் ஐஎஸ்ஐ ஆதரவுடன் பயங்கரவாத தாக்குதல் திட்டம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 08 Jan 2026 14:56 PM IST

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், மும்பை மாநிலத்தில் உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா மாநிலத்தில் வெடிபொருள்கள் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், ஐ எஸ் ஐ ஆதரவு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியானதையடுத்து, உளவுத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனால், விமான நிலையங்கள், ரயில்வே நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. டெல்லியில் கடந்த நவம்பர் 10- ஆம் தேதி மருத்துவர் ஓட்டிச் சென்ற காரில் குண்டு வெடித்து 15 பேர் உயிரிழந்தனர். 20- க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

டெல்லியில் மருத்துவர் கார் குண்டு வெடிப்பு

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்த காரை ஓட்டி வந்த மருத்துவர் உமர் உன் நபி, ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் ஹைதராபாத்தில் உள்ள அல்ஃபலா பல்கலைக்கழகத்தில் பொது மருத்துவ துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்ததும் தேசிய புலனாய்வு முகமை நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.

மேலும் படிக்க: Budget 2026: இதுவே முதல்முறை.. ஞாயிற்றுக்கிழமை தாக்கலாகும் பட்ஜெட்.. கவனிக்க வேண்டியவை என்ன?

தேசிய புலனாய்வு முகமை தீவிர விசாரணை

இந்த சம்பவத்தை தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனம் மருத்துவர் உமர் நபிக்கு சொந்தமான மற்றொரு வாகனத்தை பறிமுதல் செய்தது. தேசிய தலைநகரை உலுக்கிய குண்டுவெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்கள் உட்பட 73 சாட்சிகளை தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டுள்ளது. தற்போது வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இந்த வழக்கில் ஆதாரங்களுக்காக வாகனம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

பல்வேறு மாநிலங்களில் என்ஐஏ விசாரணை

டெல்லி காவல்துறை, ஜம்மு காஷ்மீர் காவல்துறை, ஹரியானா காவல்துறை, உத்தரப்பிரதேச மாநில காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துணை நிறுவனங்களுடன் தேசிய புலனாய்வு முகமை ஒன்றிணைந்து மாநிலங்கள் முழுவதும் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. மும்பையில் ரயில் குண்டு வெடிப்பு, தாஜ் ஹோட்டலில் குண்டு வெடிப்பு என பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

மும்பையில் உச்சக்கட்ட பாதுகாப்பு

அதன் பிறகு, விமான நிலையம், ரயில் நிலையம், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றில் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனால், சமீப காலமாக குண்டு வெடிப்பு சம்பவம் எதுவும் நிகழவில்லை. ஆனால், தற்போது ஐஎஸ்ஐ ஆதரவுடன் வெடிகுண்டு வெடிக்கும் என்று உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: சோஷியல் மீடியா வலை.. இந்திய இளைஞர்களை குறி வைக்கும் பாகிஸ்தான்.. போலீசார் சொன்ன ஷாக் தகவல்கள்!