குடியரசு தின நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை…எவ்வளவு விலை…எப்படி பெறுவது…முழு விவரம் இதோ!
Republic Day Event Ticket Sales : குடியரசு தின நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டிக்கெட்டுகளை எப்படி பெறலாம், இதற்கான விலை என்ன என்பது தொடர்பான முழு விவரங்களை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம் .
இந்தியாவில் வருகிற ஜனவரி 26- ஆம் தேதி ( திங்கள்கிழமை) 77- ஆவது குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும். இந்த விழாக்களின் நிறைவையொட்டி, பீட்டிங் தி ரிட்ரீட் விழாக்கள் ஜனவரி 28 மற்றும் 29- ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த விழாக்களில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. அதன்படி, கடந்த ஜனவரி 5- ஆம் தேதி டிக்கெட் விற்பனை தொடங்கியது. வரும் ஜனவரி 14-ஆம் தேதி வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ஆண்டு இந்திய சக்தி, அலங்கார உறுதிகள் மற்றும் நிகழ்ச்சிகளின் பிரம்மிக்க வைக்கும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.
குடியரசு தின நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை
குடியரசு தின அணிவகுப்புக்கான டிக்கெட் விலை ரூ.20 முதல் ரூ.100 வரையும், ஜனவரி 28-ஆம் தேதி நடைபெறும் பீட்டிங் ரிட்ரீடின் முழு ஆடை ஒத்திகைக்கான டிக்கெட் ரூ.20, ஜனவரி 29- ஆம் தேதி நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிக்கான டிக்கெட் விலை ரூ. 100 என காலை 9 மணி முதல் இடங்களை பொறுத்து விற்பனை செய்யப்படும். இதற்கான டிக்கெட்டுகளை www.aamantran.mod.gov- என்ற இணையதளத்தில் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை என ஏதேனும் ஒரு அடையாள ஆவணத்தின் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க: டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் புதிய வரலாறு.. விலங்குகள் படைப்பிரிவு அறிமுகம்!!




டிக்கெட்டுடன் அடையாள அட்டை
டிக்கெட்டுக்கான கட்டணத்தை ஆன்லைனில் வழியாக செலுத்திக் கொள்ளலாம். நிகழ்ச்சிக்கு வரும்போது, டிக்கெட்டுடன் புகைப்படத்துடன் கூடிய அசல் அடையாள அட்டைவற்றை கொண்டு வர வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வருகை தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆஃப்லைனில் டிக்கெட் விற்பனை
இதே போல, டெல்லி சேனா பவன் ( எல்லைக்குள் கேட் எண் 5 அருகில்), சாஸ்திரி பவன் ( கேட் எண் 3 அருகில்), ஜந்தர் மந்தர் ( பிரதான வாயில்), நாடாளுமன்ற கட்டிடம் ( வரவேற்பு), ராஜீவ் செளக் மெட்ரோ நிலையம் ( டி ப்ளாக் கேட் 3@4 அருகில்), காஷ்மீர் கேட் மெட்ரோ நிலையம் ( கான்கோர்ஸ், கேட் எண் 8 அருகில்) ஆஃப்லைன் டிக்கெட்டுகள் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும், இதே போல, மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் வழங்கப்பட உள்ளது.
இந்திய ராணுவத்தின் வலிமையை எடுத்துக்காட்டும்
இந்திய ராணுவத்தின் வலிமையை அதன் டாங்கிகள், பீரங்கிகள் மற்றும் போர் விமானங்கள் காண்பிக்கிறது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கலாச்சார அலங்கார உறுதிகள், பள்ளி மாணவர்கள், நாட்டுப்புற நடன கலைஞர்கள் மற்றும் அனைவருக்கும் குழுக்களின் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற உள்ளன. பீட் தி டரிட்ரீட் நிகழ்ச்சியில் ராணுவம், கடற்படை, விமானப்படை வீரர்களின் இசை நிகழ்ச்சிகள், துல்லியமான பயிற்சிகள் மட்டும் வரலாற்று சிறப்புமிக்க அரங்கங்களை ஒளிரச் செய்யும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறும்.
மேலும் படிக்க: பட்ஜெட்டில் தாக்கலின் போது பயன்படுத்தும் வார்த்தைகள் குழப்பமாக உள்ளதா? இதை படியுங்கள் ஈஸியா புரியும்..