Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துமவனையில் அனுமதி

Sonia Gandhi Admitted To Hospital: குறிப்பாக டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு காரணமாக சோனியா காந்தி தொடர்ந்து பரிசோதனைகளுக்காக மருத்துவமனை சென்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்தவகையில், நேற்று (திங்கட்கிழமை) மாலை சோனியாக காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் தெரிகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மருத்துமவனையில் அனுமதி
சோனியா காந்தி
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 06 Jan 2026 12:43 PM IST

டெல்லி, ஜனவரி 06: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் நாள்பட்ட இருமலால் அவதிப்பட்ட வந்ததாகவும், அதற்காக நேற்று மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர் நுரையீரல் மருத்துவரின் கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : திரிபுரா, அசாம் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. பீதியில் உறைந்த பொதுமக்கள்!

சோனியா காந்தியின் உடல்நிலை நிலவரம்:

அண்மைக் காலமாக சோனியா காந்தி தொடர்ச்சியாக உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைக்காக அவர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிப்ரவரியில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு நாள் மட்டும் மருத்துவமனையில் இருந்தார். அப்போது அவர் இரைப்பை குடல் மருத்துவ நிபுணரின் மேற்பார்வையில் இருந்தார்.

முன்னதாக, ஜூன் 19 அன்று, வயிற்று சம்பந்தப்பட்ட நோய்க்கு சிகிச்சை பெற்ற பிறகு, சோனியா காந்தி டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 79 வயதான அவர், வயிற்று தொற்று தொடர்பான பிரச்சனைகளைத் தொடர்ந்து, ஜூன் 15 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது நான்கு நாட்களாக, அவர் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்தார்.

இதையும் படிங்க : புதையலுக்கு ஆசைப்பட்டு 1 வயது குழந்தையை பலி கொடுக்க முயற்சி.. பெங்களூரில் பகீர் சம்பவம்!

ஜூன் 7 அன்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சில சிறிய உடல்நலப் பிரச்சனைகள் காரணமாக வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்று இமாச்சலப் பிரதேச முதலமைச்சரின் முதன்மை ஆலோசகர் நரேஷ் சவுகான் தெரிவித்தார்.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பினார்:

அதேபோல், கடந்த 2022 செப்டம்பர் மாதத்தில், கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனைக்காக காந்தி அமெரிக்கா சென்றார். அந்தப் பயணத்தின்போது அவரது மகன், ராகுல் காந்தியும் அவருடன் சென்றிருந்தார்.

 வழக்கமான பரிசோதனைக்காகவே அனுமதி:

இப்படி, அடிக்கடி மருத்துவமனை சென்று அவர், தற்போது வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் நாள்பட்ட இருமலால் அவதிப்பட்ட வந்ததாகவும் கூறப்படுகிறது.