Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!

Mumbai 105 Year Old Chinese Temple: மும்பையில் சுமார் 105 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சீன கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் பக்தர்களின் எதிர்காரம் கணிக்கப்படுவதாக, அதாவது எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் என்பதை முன் கூட்டியே தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது

எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
எதிர்காலத்தை கணிக்கும் சீன கோயில்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 07 Jan 2026 11:42 AM IST

மும்பையில் மஸ்கான் கப்பல் துறைமுக வளாகத்தில் நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட குவான் குங் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலானது நகரப் பகுதியில் உள்ள ஒரே சீன கோயிலாகும். குறைந்து வரும் சீன சமுதாயத்திற்கான கலாச்சார மையமாக இந்த கோயில் செயல்பட்டு வருகிறது. இந்த கோயிலானது போர், நீதி மற்றும் கோபத்தின் கடவுள் குவான் குங் மற்றும் கருணை தெய்வம் குவான் யின் ஆகியோருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு, சிவப்பு நிற கோயில் விளக்குகள் மற்றும் தெய்வங்களின் சுவர் ஓவியங்கள் உள்ளன. இது பக்தர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. குறிப்பாக சீன புத்தாண்டு மற்றும் சந்திரன் விழாவின் போது இந்த கோயிலில் சிறப்பு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகிறது.

சீன கோயிலில் உள்ள அம்சங்கள்

இந்த பழங்கால சீன கோயில் காற்றாலை மணிகள், சிவப்பு காகித விளக்குகள் மற்றும் ஒரு சிவப்பு கொடியால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. சிவப்பு நிறம் சீன கலாச்சாரத்தில் மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பை குறிப்பதாக நம்பப்படுகிறது. கோயிலின் உள்புறத்தில் சுவர்களில் சீன கையெழுத்து மற்றும் ஜிங்ஷுவில் எழுதப்பட்ட வசனங்களும் உள்ளன. தெய்வீக ஞானம் அல்லது அதிர்ஷ்டத்தை தேடுவதற்கான ஒரு பொதுவான சீன சடங்கையும் இந்த கோயிலில் பின்பற்றி வருகிறது.

மேலும் படிக்க: பல்வேறு மொழிகளில் 55 இலக்கியப் படைப்புகள்.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொன்னது என்ன?

எதிர்காலத்தை கணிக்கும் சீன கோயில்

இதில், ஆன்மீகத்தை நாடுபவர்களும், பக்தர்களும் தங்களது எதிர்காலம் தொடர்பான வழிகாட்டுதல்களை பெறுவதற்கு அட்டைகளில் வரையலாம். கடந்த 1900- ஆம் ஆண்டு உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் மும்பையில் குடியேறியனர். இது மக்களை ஈர்க்கக் கூடிய பெரிய நகரமாக மாறியது. மேலும், மசகான் மும்பையின் செழிப்பான சீ யூப் கூன் சமுதாயத்தின் தாயகமாக இருந்து வந்தது. இந்த சமுதாயம் முதலில் குவாங்சோவை சேர்ந்ததாகும்.

சைனா டவுனாக உருவாக வழிவகை

அவர்கள் மும்பையில் குடியேறிய கிழக்கிந்திய கம்பெனிகள் வேலை செய்வதற்காக மசகானுக்கு குடி பெயர்ந்தனர். இருப்பினும், இந்தியா- சீனா போரின் போது, சீனாவில் இருந்து குடி பெயர்ந்த நகரவாசிகள் தங்கள் நாட்டுக்கு திரும்பினர். அதே நேரத்தில், சில குடும்பத்தினர் அங்கேயே தங்க முடிவு செய்தனர். இது யாக்யார்ட் சாலையில் அமைந்துள்ள சைனா டவுன் உருவாக வழிவகை செய்தது. இந்த கோயிலானது கடந்த 1929- ஆம் ஆண்டு சீ யூப் கூன் சமுதாயத்தால் கட்டப்பட்டதாகும். இது சீன நாட்டில் உள்ள மிகவும் செல்வாக்கு மிகுந்த சமுதாயமாக பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: மின்சார வாகனம் வைத்திருப்போருக்கு ஹேப்பி நியூஸ்.. நெடுஞ்சாலைகளில் வருகிறது சார்ஜிங் ஸ்டேஷன்..