Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குடிபோதையில் விமானி.. நிறுத்தப்பட்ட விமானம்.. ஏர் இந்தியா ஷாக் சம்பவம்

Air India Pilot : கனடாவின் வான்கூவர் விமான நிலையத்தில், டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானி ஒருவர் விமானம் புறப்படும் முன் மது அருந்தியதாகக் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தால் விமானம் 2 மணி நேரம் தாமதமானது. மது வாசனை காரணமாக விமானி நீக்கப்பட்டு, உள்ளூர் அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

குடிபோதையில் விமானி.. நிறுத்தப்பட்ட விமானம்..  ஏர் இந்தியா ஷாக் சம்பவம்
ஏர் இந்தியா - மாதிரிப்படம்
C Murugadoss
C Murugadoss | Updated On: 02 Jan 2026 08:19 AM IST

கனடாவின் வான்கூவர் சர்வதேச விமான நிலையத்தில், புறப்படுவதற்கு முன்பு ஏர் இந்தியா விமானி ஒருவர் மது அருந்தியதாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் டிசம்பர் 23, 2025 அன்று வான்கூவரில் இருந்து டெல்லி செல்லும் AI186 விமானத்தில் நடந்ததாகவும் அது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கடுமையான மது வாசனை காரணமாக விமானி புறப்படுவதற்கு சற்று முன்பு இறக்கிவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காரணமாக விமானத்தை சுமார் இரண்டு மணி நேரம் தாமதப்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக, உள்ளூர் விமான நிலையம் உடனடியாக செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளது.

ஊடக அறிக்கைகளின்படி, விமான நிலையத்தின் டியூட்டி-ஃப்ரீ கடையில் விமானி ஒருவர் மது வாங்கி அதனை அருந்துவதை ஊழியர் ஒருவர் கவனித்தார். அந்த ஊழியர் விமானியின் மீது மதுவின் வாசனையை உணர்ந்து உடனடியாக கனேடிய அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தார். அதைத் தொடர்ந்து, விமானிக்கு பரிசோதனை செய்யப்பட்டது, அதில் அவர் மதுபானம் குடித்தது தெளிவடைந்தது. இதனையடுத்து விமானியின் பணிக்குத் தகுதி உள்ளதா என்று அதிகாரிகள் கேள்வி எழுப்பி, அவரை விமானத்திலிருந்து அகற்றி, மேலும் விசாரணைக்காக அவரைக் காவலில் எடுத்ததாகக் கூறப்படுகிறது

ஏர் இந்தியா விளக்கம்

பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், உள்ளூர் அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைப்பதாகவும் ஏர் இந்தியா ஒரு அறிக்கையை வெளியிட்டது. விசாரணையின் போது விமானி விமானப் பணிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு விதிகளை பொறுத்தவரை யாருக்கும் எந்த வித சலுகைகளும் கிடையாது என்றும், பாதுகாப்பு விவகாரத்தில் முழு பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் ஏர் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

என்ன நடந்தது

விசாரணை அறிக்கையின்படி, கிறிஸ்துமஸுக்கு முந்தைய சில நாள் என்பதால், பண்டிகை சூழ்நிலையைக் கொண்டாட விமான நிலையத்தில் உள்ள வரி இல்லாத கடைகளில் மதுபான மாதிரிகள் வழங்கப்பட்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. விமானி தற்செயலாக அந்த மாதிரியை உட்கொண்டிருக்கலாம் என்று வட்டாரங்கள் கூறுகின்றன, மற்றவர்கள் அவருக்கு மதுவின் வாசனை மட்டுமே வந்ததாகக் கூறுகிறார்கள். கனேடிய போலீசார் தற்போது இந்த விஷயத்தை விசாரித்து வருகின்றனர். விசாரணை முடியும் வரை ஏர் இந்தியா விமானியை பணியிலிருந்து நீக்கியுள்ளது.