Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஹெல்மெட்டுக்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு.. நடுங்கிப்போன குடும்பம்.. வெளியான ஷாக்கிங் வீடியோ!

Cobra Tries To Hitch; மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் புதன்கிழமை அன்று இருசக்கர வாகன ஹெல்மெட்டிற்குள் ஒரு நல்ல பாம்பு மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிக விஷத்தன்மை கொண்ட அந்தப் பாம்பு பின்னர் ஒரு வனவிலங்கு ஆர்வலரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டு, காட்டில் விடுவிக்கப்பட்டது.

ஹெல்மெட்டுக்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு.. நடுங்கிப்போன குடும்பம்.. வெளியான ஷாக்கிங் வீடியோ!
ஹெல்மெட்டிற்குள் பதுங்கியிருந்த நல்லபாம்பு
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 01 Jan 2026 13:16 PM IST

மகாராஷ்டிரா, ஜனவரி 01: மகாராஷ்டிராவில் இருசக்கர வாகனத்தில் இருந்த ஹெல்மெட்டிற்குள் ஒரு நல்லபாம்பு மறைந்திருந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த வாகன ஓட்டி அதனை தலையில் அணியவில்லை. பாம்பு சீறும் சத்தத்தை கேட்டதால், அங்கிருந்தவர்கள் உஷரானதாக தெரிகிறது. பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். இந்நிலையில் மழைக்காலம் வந்துவிட்டாலே பாம்புகள் தொல்லைகள் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் பொந்துகள், புதர்களில் இருந்து வெளிவரும் பாம்புகள் வீடுகளுக்குள், வாகனங்கள் மற்றும் ஷூவுக்குள் புகும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அப்படி, நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவம் குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : ஓலா-உபர், ராபிடோக்கு இணையாக…நாடு முழுவதும் களமிறங்கும் பாரத் டாக்ஸி…பல்வேறு முக்கிய வசதிகள்

ஹெல்மெட்டில் மறைந்திருந்த நல்ல பாம்பு:

அந்தவகையில், மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தில் புதன்கிழமை அன்று இருசக்கர வாகன ஹெல்மெட்டிற்குள் ஒரு நல்ல பாம்பு மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதிக விஷத்தன்மை கொண்ட அந்தப் பாம்பு பின்னர் ஒரு வனவிலங்கு ஆர்வலரால் மீட்கப்பட்டு, காட்டில் விடுவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நாக்பூரின் மானவ் சேவா நகர் பகுதியில் உள்ள மிடாலி சதுர்வேதி என்பவரின் வீட்டில் நடந்தது. மதியம் சுமார் 2 மணியளவில், வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு ஹெல்மெட்டிலிருந்து ஒரு விசித்திரமான சீறல் சத்தம் கேட்டது.

ஹெல்மெட்டிற்குள் உஷ் உஷ் சத்தம்:

தொடர்ந்து, சத்தம் கேட்ட இடத்தில் இருந்து உன்னிப்பாகப் பார்த்தபோது, அங்கிருந்த ஹெல்மெட்டிற்குள் பாம்பு இருந்ததைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இந்தச் செய்தி பரவிய நிலையில், பாம்பைப் பார்க்க ஆர்வமடைந்த அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்தில் கூடினர்.  உள்ளூர் அமைப்பான ‘வைல்ட் அனிமல்ஸ் அண்ட் நேச்சர் ஹெல்ப்பிங் சொசைட்டி’யைச் சேர்ந்த பாம்பு நிபுணர் சுபம் வரவழைக்கப்பட்டார். அவர் பாம்பை பத்திரமாக மீட்டு, பின்னர் அதனை வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று விடுவித்தார்.

வெளியான ஷாக்கிங் வீடியோ:

இதனிடையே, வெளியான காணொளிகளில், சுபம் பாம்பை மீட்க முயன்றபோது, ​​அது ஹெல்மெட்டின் துணி உறைக்குள் மறைந்திருப்பது தெரிய வந்தது. அதனை பார்த்த வானக ஓட்டிகள் அனைவரும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர்.

இதையும் படிக்க: திடீரென ஊருக்குள் புகுந்த புலி.. அலறி அடித்துக்கொண்டு ஓடிய மக்கள்.. மபியில் பரபரப்பு சம்பவம்!

முன்னதாக, கோவை கொடிசியா அருகே உள்ள லூலு மால் வேர்ஹவுஸில் பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த புல்லட் வாகனத்தில் மாட்டி வைத்திருந்த ஹெல்மெட்டுக்குள் 4 அடி நல்ல பாம்பு புகுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.