Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஐ.என்.எஸ்.வி. கவுண்டின்யாவின் முதல் பயணம்.. புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..

PM Modi: குஜராத்தின் போர்பந்தரில் இருந்து ஓமன் நோக்கிப் பயணம் மேற்கொண்ட ஐஎன்எஸ்வி கவுண்டின்யா என்ற மரப் பாய்மரக் கப்பலின் குழுவின் புகைப்படத்தைப் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். "ஐஎன்எஸ்வி கவுண்டின்யா குழுவினரிடமிருந்து இந்தப் படத்தைப் பெற்றதில் மகிழ்ச்சி! என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஐ.என்.எஸ்.வி. கவுண்டின்யாவின் முதல் பயணம்.. புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 01 Jan 2026 07:34 AM IST

ஜனவரி 1, 2026: போர்பந்தரிலிருந்து ஓமனின் மஸ்கட் வரையிலான தனது முதல் பயணத்தில் ஐ.என்.எஸ்.வி. கவுண்டின்யா புறப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். INSV கவுண்டின்யா என்பது இந்தியாவின் பழமையான கப்பல் (Stitched-Ship) கட்டுமான முறையை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகவும், இது இந்தியாவின் வளமான கடல் மரபுகளை வெளிப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் பண்டைய தையல் நுட்பங்களைப் பயன்படுத்தி கட்டப்பட்டது. இதற்கு இயந்திரமோ அல்லது நவீன உந்துவிசை அமைப்புகளோ இல்லை. இது காற்று மற்றும் பிற உந்துவிசை வழிகளை நம்பியுள்ளது.

கவுண்டின்யா குழுவிற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி:


குஜராத்தின் போர்பந்தரில் இருந்து ஓமன் நோக்கிப் பயணம் மேற்கொண்ட ஐஎன்எஸ்வி கவுண்டின்யா என்ற மரப் பாய்மரக் கப்பலின் குழுவின் புகைப்படத்தைப் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். “ஐஎன்எஸ்வி கவுண்டின்யா குழுவினரிடமிருந்து இந்தப் படத்தைப் பெற்றதில் மகிழ்ச்சி! அவர்களின் உற்சாகத்தைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்,” என்று மோடி, X இல் ஆழ்கடலில் கப்பல் பணியாளர்களின் படத்தைப் பகிர்ந்து கொண்டார்.

மேலும் படிக்க: 10-12-ஆம் வகுப்பு மாணவர்களே அலர்ட்….தேர்வு குறித்து சிபிஎஸ்இ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

“2026 ஆம் ஆண்டை நாம் அனைவரும் தொடங்கத் தயாராகிவிட்ட நிலையில், கடலில் பயணிக்கும் ஐ.என்.எஸ்.வி. கவுண்டின்யா குழுவிற்கு எனது சிறப்பு வாழ்த்துக்கள். அவர்களின் மீதமுள்ள பயணமும் மகிழ்ச்சியாலும் வெற்றியாலும் நிறைந்ததாக இருக்கட்டும்” என்று பிரதமர் கூறினார்.

இந்தியாவுக்கான ஓமன் தூதர் இசா சலே அல் ஷிபானி முன்னிலையில், போர்பந்தரைச் சேர்ந்த மேற்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி தளபதி வைஸ் அட்மிரல் கிருஷ்ண சுவாமிநாதன், திங்கள்கிழமை ஐஎன்எஸ்வி கவுண்டின்யாவை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சிறப்புகள் என்ன?

பண்டைய இந்திய கப்பல்களின் சித்தரிப்புகளால் ஈர்க்கப்பட்டு, பாரம்பரிய தையல்-பலகை நுட்பங்களைப் பயன்படுத்தி முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட ஐ.என்.எஸ்.வி. கவுண்டின்யா, வரலாறு, கைவினைத்திறன் மற்றும் நவீன கடற்படை நிபுணத்துவத்தின் அரிய ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமகால கப்பல்களைப் போலல்லாமல், ஐ.என்.எஸ்.வி. கௌடின்யாவின் மரப் பலகைகள் தேங்காய் நார் கயிற்றைப் பயன்படுத்தி ஒன்றாக தைக்கப்பட்டு இயற்கை பிசின்களால் மூடப்பட்டுள்ளன, இது இந்தியாவின் கடற்கரைகளிலும் இந்தியப் பெருங்கடல் முழுவதும் ஒரு காலத்தில் நிலவிய கப்பல் கட்டும் பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது.

மேலும் படிக்க:  பிரதமர் மோடியின் 2025-ஆம் ஆண்டு போட்டோஸ்.. இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கும் ஆல்பம்!

INSV கவுண்டினியா தோராயமாக 19.6 மீட்டர் நீளமும் 6.5 மீட்டர் அகலமும் கொண்டது. கலாச்சார அமைச்சகம், இந்திய கடற்படை மற்றும் ஹோடி இன்னோவேஷன்ஸ் ஆகியவற்றுக்கு இடையேயான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த திட்டம் ஜூலை 2023 இல் தொடங்கப்பட்டது.