Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

போக்குவரத்து சேவையில் ‘ஏர் டாக்சி’.. இந்தியாவில் 2026ல் அறிமுகம்.. தமிழகத்திற்கு எப்போது?

Flying Taxi: மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை, வரும் 2026ஆம் ஆண்டு முதல் டெல்லி, மும்பை மற்றும் புனே நகரங்களில் ஏர் டாக்சி சோதனையைத் தொடங்கும் என அறிவித்துள்ளது. வணிக ரீதியாக தொடங்கும்போது பயண கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு சுமார் ரூ.300 முதல் ரூ.500 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

போக்குவரத்து சேவையில் ‘ஏர் டாக்சி’.. இந்தியாவில் 2026ல் அறிமுகம்.. தமிழகத்திற்கு எப்போது?
போக்குவரத்து சேவையில் ‘ஏர் டாக்சி’
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 31 Dec 2025 07:55 AM IST

இந்தியாவில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வேகமான பயணத்தை ஏற்படுத்தவும் ‘ஏர் டாக்சி’ சேவை அறிமுகமாக உள்ளது. சாலையில் மணிக்கணக்காக கடக்கும் தூரத்தை, சில நிமிடங்களில் கடக்கச் செய்வதே இதன் நோக்கம் ஆகும். இந்தியா முழுவதும் பெருநகரங்கள் வேகமாக வளர்ந்து வருவதால், தினசரி போக்குவரத்து நெரிசல் ஒரு முக்கிய சவாலாக மாறியுள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பு, வாகனங்களின் கணிசமான உயர்வு, சாலைகளின் அகலம் மற்றும் எண்ணிக்கை அதே அளவில் அதிகரிக்காமல் இருப்பது, பொதுப் போக்குவரத்தை முழுமையாக பயன்படுத்தாதது போன்ற காரணங்கள் நெரிசலுக்கு வழிவகுக்கின்றன. இதற்கு ஒரு தீர்வை ஏற்படுத்தும் விதமாக ‘ஏர் டாக்சி’சேவைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

மேலும் படிக்க: 2025ன் கடைசி ‘மன் கி பாத்’.. ஆபரேஷன் சிந்தூரை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி பெருமிதம்!

தீவிர பணியில் 3 நிறுவனங்கள்:

அந்தவகையில், பயணிகளுக்கும், அவசர மருத்துவ சேவைக்கும், சரக்கு போக்குவரத்து ஆகியவற்றுக்கு இது பயன்படும். முதற்கட்டமாக பெங்களூரு, மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் சோதனை திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. ஏர் டாக்சி சேவையை உருவாக்குவதில் தற்போது மூன்று நிறுவனங்கள் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன. அவற்றில், பெங்களூருவைச் சேர்ந்த சார்லா ஏவியேஷன் நிறுவனம் ஏற்கனவே ஏர் டாக்சி சோதனைகளைத் தொடங்கியுள்ளது.

மேலும், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை, வரும் 2026ஆம் ஆண்டு முதல் டெல்லி, மும்பை மற்றும் புனே நகரங்களில் ஏர் டாக்சி சோதனையைத் தொடங்கும் என அறிவித்துள்ளது. இதோடு, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனம் இன்டர்குலோப் என்டர்பிரைசஸ், அமெரிக்காவின் ஆர்ச்சர் ஏவியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, விரைவில் இந்தியாவில் வணிக ரீதியான ஏர் டாக்சி சேவையை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு வருகிறது.

இதன் முக்கிய சிறப்பம்சங்கள்:

ஏர் டாக்சி என்பது ஹெலிகாப்டர் போல நேராக மேலே எழுந்து இறங்கக்கூடிய வசதியுடைய, ஆனால் முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் புதிய வகை வான்போக்குவரத்து சேவை ஆகும். இதனால் எரிபொருள் புகை மாசு இல்லாமல், குறைந்த சத்தத்துடன், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பாக இயங்கும். இந்த சேவைக்கான பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குகள் குறித்து சிவில் விமான போக்குவரத்து துறை தற்போது திட்டமிட்டு வருகிறது.

கட்டணம் எவ்வளவு இருக்கும்?

வணிக ரீதியாக தொடங்கும்போது பயண கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு சுமார் ரூ.300 முதல் ரூ.500 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் நகர போக்குவரத்து நெரிசலை குறைக்கும் ஒரு முக்கிய மாற்றமாக ஏர் டாக்சி சேவை பார்க்கப்படுகிறது.
மேலும், மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை, வரும் 2026ஆம் ஆண்டு முதல் டெல்லி, மும்பை மற்றும் புனே நகரங்களில் ஏர் டாக்சி சோதனைப் பறப்புகளைத் தொடங்கும் என அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: வளமான கடல்சார் பாரம்பரியத்தை பிரதிபளிக்கும் INSV கவுண்டின்யா – பிரதமர் மோடி பெருமிதம்..

தமிழகத்தில் எப்போது?

சென்னையில் 2026–27க்குள் சோதனை ஓட்டம் தொடங்கி, முதலில் சரக்கு போக்குவரத்து சேவை அறிமுகமாகும்.2028ஆம் ஆண்டில் பொது மக்களுக்கு வணிக ரீதியான ஏர் டாக்சி சேவை செயல்பாட்டுக்கு வரும் வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.